அண்ணாமலை கூறிய ஒரே வார்த்தை: தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்ட பரபரப்பு!
அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறி இருக்கிறார்.
By : Bharathi Latha
தமிழ்நாடு பா.ஜ.க கூட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் பேசிய விஷயம் தற்போது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக அவர் கூறுகையில் , அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியில் இருந்த தான் ராஜினாமா செய்வதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அவர்கள் தன்னுடைய விவாத பதிலையும் அளித்து இருக்கிறார். அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க இடையே கடுமையான மோதல்கள் இருப்பதாக ஏற்கனவே வெளிவட்டாரங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த ஒரு சூழ்நிலையில் தற்பொழுது மீண்டும் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
வரும் தேர்தலில் பா.ஜ.கவும், அ.தி.மு.கவும் கூட்டணி வைக்குமா? என்பது எதிர்க்கட்சியின் முக்கிய உற்று நோக்கும் விஷயமாக இருந்து வந்தது. அதற்காக இரண்டு கட்சிகள் இடையே பெரும் விவாதத்தை கிளப்பி விட வேண்டும் என்பதற்காக பல்வேறு புரவல்களை எதிர்க்கட்சி கிளப்பு வந்தது. இத்தகைய சூழ்நிலையில் பா.ஜ.க மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பா.ஜ.க தலைவர் நேற்று கூறிய பொழுது, பா.ஜ.கவை எப்படி வளர்க்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். அதற்காக என்னிடம் திட்டம் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்றுவதற்கு எனக்கு சுதந்திரம் வேண்டும்.
எனக்கு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் அதனால் தான் கூறுகிறேன் தமிழகத்தில் நாம் வளர வேண்டும் என்றால் தனித்து நிற்க வேண்டும். அ.தி.மு.கவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொன்னால் அதாவது பதவியை ராஜினமாக செய்து விடுவேன் என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்த விவாதத்தின் போது எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அவர்கள் இது தேசிய கட்சி, எனவே தேசிய தலைமை சொல்வதை தான் நாம் செயல்படுத்த வேண்டும். மாநில கேர் கமிட்டி மையக் கூட்டம் நடக்கும் பொழுது தான் இதை குறித்து நாம் பேச வேண்டும். இப்பொழுது பேச வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: News