தமிழகம், புதுவையில் பிரதமர் மோடி உட்பட பல்வேறு தலைவர்கள் தேர்தல் பரப்புரை: பா.ஜ.க. வெளியிட்ட பெயர் பட்டியல்.!
தமிழகம் உட்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அதிமுக, திமுக பிரதான கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்கிறது.
By : Thangavelu
தமிழகம் உட்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அதிமுக, திமுக பிரதான கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்கிறது.
அதே போன்று பாஜக சார்பில் 5 மாநிலங்களுக்கும் தலைவர்கள் சுற்றுப்பயணம் திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன்படி தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் பரப்புரை செய்வதற்காக பாஜக தலைவர்கள் தமிழகம் வருகின்றனர்.
அதில், பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், ஸ்மிரிதி இராணி, கிஷன் ரெட்டி வி.கே.சிங் மற்றும் உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மேலும், பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, புரந்தேஸ்வரி, சுதாகர் ரெட்டி, தேஜஸ்வி சூர்யா, இல.கணேசன், வி.பி.துரைசாமி, கே.டி.ராகவன், சசிகலா புஷ்பா, நடிகைகள் கவுதமி, விஜயசாந்தி, நடிகர்கள் ராதாரவி, செந்தில், பேராசிரியர்கள் கனகசபாபதி, ராமசீனிவாசன், கே.பி.ராமலிங்கம், காயத்ரிதேவி, ராம்குமார் கணேசன், வேலூர் இப்ராகிம் ஆகியோர் பரப்புரை செய்கின்றனர்.
இதே போன்று புதுச்சேரி மாநிலத்திலும் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா, ராஜ்நாத்சிங், நிதின்கட்காரி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் பங்கேற்று பாஜக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கின்றனர்.
இந்த பெயர் பட்டியலில் உள்ளவர்கள் ஒரு சில நாளில் தமிழகத்தில் பரப்புரை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.