Kathir News
Begin typing your search above and press return to search.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: 3 மணி நிலவரம்?

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும் (அக்டோபர் 6) சனிக்கிழமை (9ம் தேதி) ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: 3 மணி நிலவரம்?

ThangaveluBy : Thangavelu

  |  6 Oct 2021 3:23 PM GMT

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும் (அக்டோபர் 6) சனிக்கிழமை (9ம் தேதி) ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில், காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு முதல் இரண்டு மணி நேரத்தில் 7.72 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் கூறினார். இதனிடையே சிறப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி, வேலூர் மாவட்டத்தில் 53.32 சதவீதம் வாக்குப்பதிவானது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 49.79 சதவீதமும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 46.3 சதவீதம் வாக்குப்பதிவும், விழுப்புரம் மாவட்டத்தில் 61.04 வாக்குப்பதிவானதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News