தமிழகம் வந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.!
தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் தலைவர்கள் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
By : Thangavelu
தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் தலைவர்கள் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் பாஜக வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது.
இதனிடையே பாஜக தேசிய தலைவர்கள் தமிழகத்தில் தீவிரமாக சுற்றுப்பயணம் செய்து கட்சி சார்பாக நடத்தப்படும் மாநாடு, மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் தமிழகத்திற்கு வருகை தந்தார். அப்போது வரவேற்க கூடியிருந்த பாஜகவினரை பார்த்து அமித்ஷா உற்சாகமாக கையசைத்தார்.
இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக பாஜக செய்துள்ளது. இதனால் பாஜக தொண்டர்களிடையே உற்சாகத்தை காண முடிகிறது. அடிக்கடி தேசியத்தலைவர்கள் தமிழகத்திற்கு வருகை புரிவதால் தொண்டர்களும் எழுச்சியுடன் களப்பணியாற்றி வருகின்றனர்.