தேர்தல் செலவினங்களை பார்வையிட தமிழகம் வரும் அதிகாரிகள்.!
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதில் தீவிரம் காட்டி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதில் தீவிரம் காட்டி வருகிறது.
இதனிடையே வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், பிரதான கட்சிகளான அதிமுக, மற்றும் திமுக கட்சிகள் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு தொகுதிகள் இறுதி செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
இதற்கிடையே அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. வாக்களிக்க கூடுதல் நேரம் மற்றும் கொரோனா அச்சுறுத்தலை சமாளிக்க கூடுதல் வாக்குச்சாவடி மையங்களை அமைத்து வருகிறது.
இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் செலவின பார்வையாளர்கள் மது மகாஜன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் இன்று தமிழகம் வருகின்றனர். டெல்லியில் இருந்து இன்று மாலை சென்னை வருகின்றனர். இவர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்களின் செலவு கணக்குகளை ஆய்வு நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.