Kathir News
Begin typing your search above and press return to search.

'தீபாவளிக்கு பட்டாசு வேண்டாம்' அறிவுரை சொல்லிய தனிஷ்க் ஜீவல்லரி - வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'தீபாவளிக்கு பட்டாசு வேண்டாம்' அறிவுரை சொல்லிய தனிஷ்க் ஜீவல்லரி - வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

தீபாவளிக்கு பட்டாசு வேண்டாம் அறிவுரை சொல்லிய தனிஷ்க் ஜீவல்லரி - வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  9 Nov 2020 8:12 PM GMT

ஜுவல்லரி பிராண்டான தனீஷ்க் வெளியிட்ட புதிய விளம்பரத்தில், தீபாவளி பண்டிகை பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம் பெற்றிருப்பதால், நெட்டிசன்கள் இடம் இருந்து இந்த விளம்பரத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அதன் தொடர்சியாக தனீஷ்கை விளம்பர வீடியோவில், இந்து மக்களின் எந்த ஒரு சின்னத்தையும் நீங்கள் ஏன்? குறிப்பிடவில்லை என்ற கேள்வியையும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோர் எழுப்பி உள்ளனர்.

மேலும் தனீஷ்க் ஆரம்பத்திலேயே வெளியிட்ட ஒரு விளம்பரத்தில், லவ்ஜிகத்தை ஊக்குவிப்பதற்காக தனிஷ்க் ஏற்கனவே எடுக்கப்பட்ட விளம்பரம் கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், தற்போது மீண்டும் தனிஷ்க் மறுபடியும் தீபாவளியை குறித்த மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அந்த விளம்பரத்தின் ஆரம்பத்தில் ஒரு பெண்மணி தீபாவளி என்றால் புதுத்துணி உடுத்துவதும், இனிப்புகளை சாப்பிடுவது, நகைகளை அணிவது மட்டுமே என்றும், மேலும் 'நான் தீபாவளியில் பட்டாசு வெடிக்கக் வில்லை. யாருமே தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கூடாது' என்பது போன்ற வாசகங்கள் சமூக ஊடகங்களில் இந்துக்களிடையே கடும் கோபத்தை எழுப்பியுள்ளது.

ஏற்கனவே கடும் பிரச்சினைகள் சிக்கி இந்துக்களின் இடம் மும்பையிலுள்ள தனிஷ்க் ஷோரூமில் மன்னிப்பு போஸ்டர் ஒட்டும் அளவிற்கு சென்று இருந்தாலும், தற்போது மறுபடியும் இந்துக்களை சீண்டிப் பார்ப்பது என்ன மாதிரியான விளையாட்டு என்பது தெரியவில்லை. இம்முறையும் தனிஷ்க் விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், தன்னுடைய ட்விட்டை தனிஷ்க் டெலிட் செய்தது. மேலும் இந்து பண்டிகைகளுக்கு உரிய அர்த்தங்களையும் மாற்றி, பண்டிகை என்றாலே வெறும் புத்தாடை அணிந்து, இனிப்பு சாப்பிடுவது இந்து கடவுள்களை இந்துக்களிடமிருந்து பிரிப்பதாகவும் உள்ளதாகவும் பலரும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உங்களுடைய கருத்தை தெரிவித்துள்ளனர்.

பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி தனீஷ்க் பற்றி தன்னுடைய ட்விட்டரில், "எங்கள் பண்டிகைகளை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்று யாராவது ஏன் இந்துக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்?" என்று தெரிவித்துள்ளார்.


இதன் விளைவாக, தீபாவளியை எவ்வாறு கொண்டாட வேண்டும்? என்று இந்துக்களுக்கு சொல்லிக் கொடுப்பது போல இருப்பதாக, பல இந்துக்கள் தனிஷ்க் மீது கடும் கோபத்தில் உள்ளார்கள். மேலும் இந்துக்கள் பண்டிகையை கொண்டாடுவது எப்படி என்பது இந்துக்களுக்கு தெரியும். அவர்கள் தீபாவளியன்று புத்தாடை உடுத்தி, அதுமட்டுமல்லாமல் பட்டாசு வெடிப்பதும் தங்கள் மகிழ்ச்சியான தருணங்களில் ஒரு அங்கமாக கருதுகிறார்கள்.


தனீஷ்க் நிறுவனத்தில் எந்தவொரு விளம்பரத்திலும், எப்பொழுதும் இந்துக்களுக்கு அறிவுரை கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த விளம்பரத்திற்கு எதிராக தங்களுடைய கோபத்தை எழுப்பி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News