Kathir News
Begin typing your search above and press return to search.

மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம்.!

தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்தும், நாட்டு மக்களின் நலன் கருதி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் சென்னையில் உள்ள எனது இல்லத்தின் முன் மதுவிலக்குக்கு ஆதரவாகவும், மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராகவும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அறப்போராட்டம் நடத்தினேன்.

மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  17 Jun 2021 1:23 PM IST

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மதுக்கடைகள் திறப்பை எதிர்த்து பாமக சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் கையில் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார். மதுக்கடைகளை உடனடியாக தமிழக அரசு மூடவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.




இது குறித்து அவர் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படாத நிலையில், தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளை நிர்வாகிகளின் வீடுகள் முன் கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து 5 பேருக்கு மிகாமல் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிவித்திருந்தார்கள்.




மருத்துவர் அய்யா அவர்களின் ஆணைப்படி, தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்தும், நாட்டு மக்களின் நலன் கருதி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் சென்னையில் உள்ள எனது இல்லத்தின் முன் மதுவிலக்குக்கு ஆதரவாகவும், மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராகவும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அறப்போராட்டம் நடத்தினேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதே போன்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., பென்னாகரத்தில் ஆர்ப்பாட்டம் செய்தார். இதே போன்று தமிழகம் முழுவதும் பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் தங்களின் வீடுகள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News