கோவிலை நாங்கதான் திறந்தோம் - கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத 'செயல்பாபு' !
By : Mohan Raj
கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற ரீதியில் அமைச்சர் சேகர்பாபு கோவில்கள் திறப்பு விஷயத்தில் பேசியுள்ளார்.
தமிழகத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை 'பத்து நாட்களுக்குள் அனைத்து நாட்களிலும் வழிபடுகின்ற வகையில் கோவிலை திறக்க வேண்டும்' என தி.மு.க அரசுக்கு கெடு விதித்தார். அதனைதொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பா.ஜ.க'வினருடன் தமிழக மக்கள் சார்பாக கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து தி.மு.க அரசு நேற்று கோவில்கள் வாரத்தின் அனைத்து தினங்களும் திறந்திருக்கும் என அறிவித்தது. இந்நிலையில் தமிழக மக்கள் பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு நன்றிகளையும், இணையத்தில் வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்தனர்.
இதற்கிடையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "கோவில்களை திறக்க பா.ஜ.க கொடுத்த அழுத்தத்தினால் தான் கோயில்கள் திறக்கப்பட்டதாக கூறுவது தவறு. கட்டுப்பாடு இல்லாத ஆட்சிக்கு தான் அழுத்தம் கொடுக்க வேண்டும், தமிழகம் முழுவதும் ஆய்வுகள் நடத்திய பின்னரே கோயில்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. யாருடைய அழுத்தத்திற்கும் அடிபணிகிற ஆட்சி இது அல்ல" என கூறினார்.
கடந்த வாரம் மத்திய அரசின் வழிகாட்டுதலால் கோவில்கள் மூடப்பட்டுள்ளது என கூறிய அமைச்சர் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்களின் அழுத்தத்திற்கு பிறகு கோவில்களை திறந்துவிட்டு யாருக்கும் அடிபணிகிற கட்சி அல்ல என கூறுவது 'கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை' என சமாளிப்பது போல் உள்ளது.