Begin typing your search above and press return to search.
தாராபுரத்தில் விபத்தில் சிக்கிய அமைச்சரின் கார்.. 2 போலீசார் காயம்.!
பாதுகாப்புக்கு சென்ற கார் விபத்திற்குள்ளானது. இதில் 2 காவலர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு கோவையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
By : Thangavelu
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பாதுகாப்பு வாகனம் விபத்தில் சிக்கியதில், அந்த காரில் பயணம் செய்த 2 காவலர்கள் படுகாயமடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் பிரதமர் மோடி இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அந்த கூட்டத்திற்கு செல்வதற்காக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பயணம் செய்தார்.
அப்போது அவர்களுக்கு பாதுகாப்புக்கு சென்ற கார் விபத்திற்குள்ளானது. இதில் 2 காவலர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு கோவையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதே போன்று துணை சபாநாயகர் பொள்ளாட்சி ஜெயராமன் சென்ற காரும் விபத்திற்கு உள்ளானது. ஒரே நேரத்தில் முக்கிய பிரமுகர்களின் கார் அடுத்தடுத்து விபத்திற்குள்ளானது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Next Story