டெல்லியில் கட்டப்பட்டுள்ள அ.தி.மு.க. அலுவலகம் விரைவில் திறப்பு.!
டெல்லியில் கட்டப்பட்டுள்ள அ.தி.மு.க. அலுவலகம் விரைவில் திறப்பு.!

இந்திய நாட்டின் தலைநகர் டெல்லியில் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அலுவலகம் கட்டுவதற்காக, மத்திய அரசு இடம் வழங்கியுள்ளது. அதாவது தேர்தல் ஆணையத்தின் மூலமாக அங்கீகாரம் பெற்ற மாநில மற்றும் தேசிய கடசிகளுக்காக இந்த வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அ.தி.மு.க.வுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் அலுவலகத்தை அந்த கட்சி கட்டியுள்ளது. இதன் பணிகள் முழுவதையும் முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரைதான் கவனித்து வருகிறாராம். சில நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்று ஆய்வு நடத்தியுள்ளார்.
தான் முதலமைச்சராக இருக்கும்போதே இந்த அலுவலகத்தை திறந்து வைத்துவிட வேண்டும் என ஆர்வமாக உள்ளாராம். எனவே ஒரு சில பணிகள் முடிவடைந்து அடுத்த மாதம் திறப்பதற்கு வாய்ப்பிருப்பதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தகவல் கூறுகின்றன.