Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க கவுன்சிலர் வேட்பாளரின் சொத்து மதிப்பே ரூ.18.45 கோடி! சமூகம் எல்லோருமே பெரிய இடம் போலிருக்கே..!

The-assets-of-the-DMK-councilor-candidate-are-worth-Rs-18-45-crore

தி.மு.க கவுன்சிலர் வேட்பாளரின் சொத்து மதிப்பே ரூ.18.45 கோடி! சமூகம் எல்லோருமே பெரிய இடம் போலிருக்கே..!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Feb 2022 4:21 AM GMT

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பெரும்பாலான திமுக வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதில் சென்னை மாநகராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன் சொத்து மதிப்பு, சுமார் 18.45 கோடி ரூபாய் என வேட்புமனு தாக்கலின் போதே கணக்கு காட்டப்பட்டுள்ளது.

பொதுவாக வேட்புமனு தாக்கலின் போது, முழு சொத்து மதிப்பு விவரங்களையும் யாரும் வெளியிடுவதில்லை. அதிலேயே 18கோடிக்கும் மேல் சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ரவிச்சந்திரன் சென்னை பெருங்குடி பகுதி திமுக செயலாளராக பதவி வகித்து வருகிறார். அரசியல் பணிகளுக்கிடையே ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.

தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தலில், சென்னை சோளிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 184-வது வார்டு திமுக வேட்பாளராக ரவிச்சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். தனது வார்டில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் அவர், தமது வேட்புமனுவில் 18.45கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கே இவ்வளவு சொத்து இருக்குமா என்பது சந்தேகம். அப்படி இருக்கையில், கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு கோடிக்கணக்கில் இருப்பது வியப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

ரவிச்சந்திரனின் மனைவி பெயரிலும் இரண்டு கோடிக்கும் மேல் சொத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கணக்குப்போட்டு பார்த்தால், இருபது கோடிக்கும் மேல் சொத்து மதிப்பு கொண்ட வேட்பாளராக களத்தில் முன்னணி வகிக்கிறார்.







Next Story
கதிர் தொகுப்பு
Trending News