'இனி ஆண்டு தோறும் சொத்துவரி உயரும்' -என்ன சொல்கிறது தி.மு.க அரசின் புதிய மசோதா?
By : Thangavelu
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்துவரியை உயர்த்தி தி.மு.க. அரசு கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. அதிகப்பட்சமாக 150 சதவீதம் சொத்துவரி உயர்ந்தது. இதனால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகினர்.
இதற்கு மத்தியில் சென்னை மாநகராட்சியும் ஆண்டு தோறும் சொத்து வரி உயர்வு குறித்த அறிவிப்பையும் வெளியிட்டது. அதாவது ஆண்டுதோறும் தெருக்கட்டணமானது 6 சதவீதம் அல்லது 5 ஆண்டுகளில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் சராசரி வளர்ச்சி வீதம், இதில் எது அதிகமாக இருக்கிறதோ அதன்படி உயர்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இது போன்று உயர்த்தப்படும் அனைத்தும் புதிய மதிப்பீடுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கி வரும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மசோதா ஒன்று தாக்கல் செய்தார். மாநகரங்கள் மற்றும் நகரங்கள், பெருநகர வளர்ச்சிகளுக்கான ஒரு சாத்தியமான சுகாதார முறையான மலக்கசடு மற்றும் கழிவுநீர் மேலாண்மையின் முக்கியத்துவம் அரசு அங்கீகரித்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் சொத்துவரியை உயர்த்துவதற்கு இந்த மசோதா உதவும். இதன் மூலம் நாளை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் நிரந்தரமாக ஆண்டுதோறும் சொத்துவரி உயர்ந்து கொண்டே செல்லும். இதனால் ஏழை, எளிய மக்கள் மிகப்பெரிய இன்னலுக்கு தள்ளப்படுவார்கள் என்பது நிதர்சனம். தி.மு.க. அரசு ஏழைகளுக்கான அரசு என முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லிக்கொள்ளும் நிலையில் தற்போது மக்களுக்கு எதிராகவே அனைத்து மசோதாவும் நிறைவேறி வருகிறது.
Source, Image Courtesy: Asianetnews