Kathir News
Begin typing your search above and press return to search.

'பா.ஜ.கவிற்கு குடியரசுத் தலைவர் முதல் வாய்ப்பு கிடைத்தவுடன் இஸ்லாமியரைதான் தேர்வு செய்தது' - அண்ணாமலை

இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்புக்காக பிரதமர் மோடியும் பா.ஜ.க'வும் செயல்படுவதாக பிற அரசியல் காரணம் ஆனால் அரசியல் காரணங்களுக்காக பா.ஜ.க'வை பற்றி பிறர் விமர்சிப்பதை ஏற்க வேண்டாம் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பா.ஜ.கவிற்கு குடியரசுத் தலைவர் முதல் வாய்ப்பு கிடைத்தவுடன் இஸ்லாமியரைதான் தேர்வு செய்தது - அண்ணாமலை
X

Mohan RajBy : Mohan Raj

  |  27 April 2022 11:45 AM IST

இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்புக்காக பிரதமர் மோடியும் பா.ஜ.க'வும் செயல்படுவதாக பிற அரசியல் காரணம் ஆனால் அரசியல் காரணங்களுக்காக பா.ஜ.க'வை பற்றி பிறர் விமர்சிப்பதை ஏற்க வேண்டாம் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக பா.ஜ.க சார்பில் பிரமாண்டமாக நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசுகையில், 'இஸ்லாமியர்களின் கடமைகளை முக்கியமாக கருதப்படும் ரமலான் நோன்பு தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது அதுவும் புண்ணிய காலத்தில் நல்ல மனதுடன் நோன்பு இருக்கிறார்கள் இந்த புண்ணிய காலத்தில் உங்களுடன் கலந்து கொள்வதே பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.

மேலும் பா.ஜ.க'வை பற்றி தெரியாதவர்களும், தெரிந்தவர்களும் அரசியல் காரணங்களுக்காக பா.ஜ.க மாநிலத் தலைவரும், பா.ஜ.க'வினரும் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கருதுகிறார்கள்! தமிழக பா.ஜ.க'வில் சிறுபான்மையினர் ஒரு அங்கமாக இருந்து வருகின்றனர், பலர் நீண்ட காலமாக பொறுப்புகளிலும் இருந்து வருகின்றனர். இந்தியாவில் அவரவர் கடவுள்களை விட்டுக்கொடுப்பதில்லை இதைத்தான் இந்தியா விரும்புகிறது அதுதான் பா.ஜ.க சித்தாந்தம் ஆனால் இந்த பா.ஜ.கவின் சித்தாந்தத்தை புரிந்து கொள்ளாமல் சிலர் உள்ளனர்.

பா.ஜ.க'வில் உள்ள இஸ்லாமியர்களுக்கு தேசியத்தை பற்றியும் முழுமையாக தெரியும் இஸ்லாத்தை பற்றியும் முழுமையாக தெரியும், எந்த கட்சியில் இஸ்லாமியர்கள் பங்கு உண்டு என்பதை தெரிந்து வைத்திருக்கிறார்கள். பா.ஜ.க'வில் அங்கம் வகிக்கும் இஸ்லாமியர்கள் பா.ஜ.க'வின் வளர்ச்சிக்கு ஆரம்பத்திலிருந்தே துணையாக இருக்கிறார்கள். ஆனால் தற்போது சில அரசியல் கட்சிகள் இஸ்லாமியர்களை வாக்கு வங்கிகளாக மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்' என்றார்.

இந்துக்களையும், இஸ்லாமியர்களும் எதிரும் புதிருமாக வைத்துக்கொண்டு அரசியல் நடத்தி வருகின்றனர் ஆனால் பிரதமர் மோடி இஸ்லாமிய மக்களின் குறிப்பாக பெண்களின் பாதுகாப்புக்காகவும் சுதந்திரத்திற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உதவி செய்து வருகிறார். அனைவருக்கும் இடம் ஒன்றை தேர்வு செய்ய வாய்ப்பு கிடைத்தபோது இஸ்லாமியரான அப்துல் கலாமை தேர்வு செய்தது இரண்டாவது முறை வாய்ப்பு கிடைத்த போது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த தற்போதைய குடியரசுத் தலைவரை தெரிவு செய்தது இதன்மூலம் பா.ஜ.க'வை பற்றி அனைவரும் அறிந்துகொள்ள முடியும் என அண்ணாமலை கூறினார்.


Source - News 18

Next Story
கதிர் தொகுப்பு
Trending News