Kathir News
Begin typing your search above and press return to search.

உலக அளவில் சிறந்த ஆசிரியர் விருது பெற்றவரை, மகாராஷ்டிரா சட்டமன்ற மேலவைக்கு பரிந்துரைத்த பா.ஜ.க.!

உலக அளவில் சிறந்த ஆசிரியர் விருது பெற்றவரை, மகாராஷ்டிரா சட்டமன்ற மேலவைக்கு பரிந்துரைத்த பா.ஜ.க.!

உலக அளவில் சிறந்த ஆசிரியர் விருது பெற்றவரை, மகாராஷ்டிரா சட்டமன்ற மேலவைக்கு பரிந்துரைத்த பா.ஜ.க.!

Muruganandham MBy : Muruganandham M

  |  6 Dec 2020 9:46 AM GMT

மகாராஷ்டிரா சட்டமன்ற மேலவைக்கு ரஞ்சித்சிங் டிசாலை பரிந்துரைக்குமாறு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை தங்கள் கட்சி கோருவதாக பாஜக தலைவர் பிரவீன் தரேகர் சனிக்கிழமை அறிவித்தார்.

மாநில அரசின் பரிந்துரையின் பேரில் இலக்கியம், கலை, அறிவியல், கூட்டுறவு இயக்கம் மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளைச் சேர்ந்த 12 உறுப்பினர்களை சட்டமன்ற மேலவைக்கு பரிந்துரைக்க ஆளுநருக்கு அரசியலமைப்பு சட்டம் அதிகாரம் வழங்கியுள்ளது. ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியரான டிசேல் இந்த ஆண்டிற்கான உலக அளவில் சிறந்த ஆசிரியர் என்ற பட்டதை பெற்றவர். வியாழக்கிழமை வெளியான அறிவிப்பின் படி 1 மில்லியன் டாலர் பரிசு கிடைக்கப்பெற உள்ளது.

140 க்கும் மேற்பட்ட நாடுகளின் 12,000 பரிந்துரைகள் மற்றும் விண்ணப்பங்களில் இருந்து இறுதியில் வெறும் 10 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் ரஞ்சித்சிங்கும் ஒருவர். டிசாலின் இல்லத்தில் ஊடகங்களிடம் உரையாற்றிய மகாராஷ்டிரா பாஜக தலைவர் தரேகர், இதுபோன்ற நபர்களின் அறிவு அரசிற்கும் நாட்டிற்கும் பெருமளவில் பயனுள்ளதாக இருக்கும். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர், இந்திய தேர்தல் முறை டிஸேல் போன்ற ஒருவருக்கு வாய்ப்புகளை வழங்கவில்லை என்று புலம்பினார். அவரைப் பொறுத்தவரை, நல்லவர்கள் அரசியலில் நுழைவது அவசியம். தற்போது அது நனவாகிவிட்டது என்று கூறினார்.

தரேகர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "இதுபோன்றவர்களின் அறிவு மாநிலத்திற்கும் நாட்டிற்கும் முன்னேற பயனுள்ளதாக இருக்கும். நல்லவர்கள் அரசியலில் வர வேண்டும் என்று கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News