"குடும்ப கட்சிகள், ஒரு நபரின் ஆதிக்கத்தில் உள்ளது. இவர்களுக்கு எவ்வித சித்தாந்தமும் கிடையாது" - ஜே.பி.நட்டா!
By : Thangavelu
தேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதற்கு மாநிலக் கட்சிகளின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடம் கொடுப்பதில்லை என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.
ஜனநாயக ஆட்சிக்கு குடும்ப அரசியல் கட்சிகள் அச்சுறுத்தல் என்ற கருத்தரங்களில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு அவர் பேசியதாவது: ''குடும்ப அரசியல் கட்சிகள், ஒரு நபரின் ஆதிக்கத்தில் உள்ளது. இவர்களுக்கு எவ்வித சித்தாந்தமும் கிடையாது. அவர்களால் ஜனநாயகத்திற்கு மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.
மேலும், பிறப்பின் அடிப்படையிலான எந்த ஒரு பாகுபாட்டையும் அரசியலமைப்பு தடை செய்யும். ஆனால் இந்த குடும்ப அரசியல் கட்சிகளில் தலைமை என்பது பிறப்பின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. மற்றவைகள் புறக்கணிக்கப்படுகிறது. ஆனால் தேசிய அளவில் ஆதிக்கம் செலுத்துவதற்கு மாநிலக் கட்சிகளின் விருப்பத்திற்கு காங்கிரஸ் இடம் தரவில்லை.
ஆனால் பா.ஜ.க. அப்படி இல்லை, வேற்றுமையில் ஒற்றுமை நம்புகிறது. மத்தியில் ஆட்சியில் வலுவாக வைத்துள்ளது. அதே நேரத்தில் மாநில கட்சிகளின் விருப்பத்துக்கு இடம் அளிக்கிறது. மிக, மிக வருத்தம் அளிக்கின்ற விஷயமாக பார்ப்பது என்னவென்றால், காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் தேசியமோ, இந்தியரோ, ஜனநாயகமோ இல்லை. தற்போது அது குடும்ப கட்சியாக மாறிவிட்டது. அனைத்தையும், ஒரு குடும்பம் மட்டுமே தீர்மானிக்கிறது. ஆனால் பா.ஜ.க.வில் குடும்ப ஆட்சி இல்லை, அனைவரும் சமம். இவ்வாறு அவர் பேசினார்.
Source, Image Courtesy: Vikatan