ராயபுரம் தொகுதியில் இரண்டாம் பிடித்த பா.ஜ.க.!
சென்னை ராயபுரம் பகுதியில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்திருப்பது அந்த கட்சி தொண்டர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.
By : Thangavelu
சென்னை ராயபுரம் பகுதியில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்திருப்பது அந்த கட்சி தொண்டர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் நடந்து முடிந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் ஆளும் கட்சி அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணத்தால் பல வார்டுகளை கைப்பற்றியது. வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய்கூட கொடுக்காமல் பாஜக பல வார்டுகளில் இரண்டாம் இடம் மற்றும் சில வார்டுகளில் வெற்றியும் பெற்றுள்ளது.
இந்நிலையில், சென்னை ராயபுரம் தொகுதியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில் 14 இடங்களில் திமுக கூட்டணி வென்றது. இதே வார்டுகளில் திமுகவுக்கு அடுத்த இடங்களை பாஜக பிடித்துள்ளது. 54, 55, 57, 59 உள்ளிட்ட வார்டுகளில் பாஜக இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. திமுக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Puthiyathalaimurai