ஏப்ரல் மாதத்தில் மட்டும் 38 யூடியூப் சேனல்கள் முடக்கம் - வேகம் காட்டும் மத்திய அரசு
38 யூட்யூப் சேனல்களை மத்திய அரசு இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவித்ததாக மத்திய அரசு முடக்கியுள்ளது.
By : Mohan Raj
38 யூட்யூப் சேனல்களை மத்திய அரசு இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவித்ததாக மத்திய அரசு முடக்கியுள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானில் 6 சேனல்கள் உட்பட 16 யூட்யூப் சேனல்களுக்கு இந்திய அரசு சமீபத்தில் தடை விதித்தது, நாட்டின் தேசிய பாதுகாப்பு வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தகவல்களை பரப்பியதாக குறிப்பிட்ட யூடியூப் சேனல்கள் மீது மத்திய அரசு குற்றம் சாட்டியது.
முன்னதாக இதே காரணங்களுக்காக இந்த மாத தொடக்கத்தில் 22 யூடியூப் சேனல்களை மத்திய அரசு தடை செய்தது இப்பொழுது இந்த பட்டியலில் புதிதாக 16 யூடியூப் சேனல்கள் சேர்ந்து உள்ளன. முன்பு முடக்கப்பட்ட 22 யூட்யூப் சேனல்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவை ஆகும், ஆகமொத்தம் இந்த மாதத்தில் மத்திய அரசால் ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசால் தடை செய்யப்பட்டு உள்ள செல்களின் எண்ணிக்கை மொத்தம் 38, அதில் பாகிஸ்தானை சேர்ந்த யூடியூப் சேனல்கள் 10 என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய 16 யூட்யூப் சேனல் களுக்கான தடை கடந்த 25'ம் தேதி அன்று அறிவிக்கப்பட்டது, இந்த 16 சேனல்களில் ஒட்டு மொத்த பார்வையாளர்கள் எண்ணிக்கை சுமார் 68 கோடி என அரசு தகவல் தெரிவித்துள்ளது .
இந்திய அரசுக்கு எதிராக பொய்யான தகவல்களை பரப்புவது, இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்பது, இந்தியாவில் நிலவும் அமைதியை சீர் குலைப்பது, இந்தியாவின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிப்பது போன்ற பலதரப்பட்ட கருத்துக்களை இந்த யூட்யூப் சேனல்கள் பார்வையாளர்களிடையே பரப்பி வந்தது குறிப்பிடத்தக்கது.