தி.மு.க தாரைவார்த்த கச்சத்தீவை மீட்க அண்ணாமலையின் அதிரடி திட்டம் - இலங்கை பயணத்தின் பின்னணி என்ன?
கடந்த காலத்தில் தி.மு.க ஆட்சியில் இலங்கையிடம் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை 99 ஆண்டுகள் குத்தகைக்கு மீட்க மத்திய அரசு அதிரடியாக திட்டமிட்டுள்ளது
By : Mohan Raj
கடந்த காலத்தில் தி.மு.க ஆட்சியில் இலங்கையிடம் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை 99 ஆண்டுகள் குத்தகைக்கு மீட்க மத்திய அரசு அதிரடியாக திட்டமிட்டுள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி இரவு இலங்கை சென்ற தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை 4 நாள் பயணத்தை முடித்து நேற்று காலை சென்னை திரும்பினார் அங்கு நுவரெலியாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடத்திய உழைப்பாளர் தின விழாவில் பங்கேற்ற அண்ணாமலை பல்வேறு தமிழ் அமைப்புகள் கட்சிகளின் தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் ஆன்மீக தலைவர்களையும் சந்தித்து பேசினார்.
இந்திய அரசியல் பிரதிநிதியாக செல்லாவிட்டாலும் அண்ணாமலையை பிரதமர் நரேந்திர மோடியின் பிரதிநிதியாகவே இலங்கை அரசு கருதி அங்குள்ள தமிழர்கள் வரவேற்பளித்தனர்
இலங்கை செல்லும் முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரிடம் அண்ணாமலை ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மலையக மற்றும் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளுடன் பேசி அவரை இந்தியாவிடம் எதிர்பார்ப்பது என்ன அவர்களின் உண்மையான பிரச்சினை என்ன என்பதைக் கண்டறிந்து அறிக்கை அளிக்குமாறு அண்ணாமலையிடம் கட்சி மேலிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.
அதற்காகவே தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்லாது இலங்கை ஜெயராஜ் போன்ற ஆன்மீகத் தலைவர்கள் ஈழத்தமிழர்களுக்காக பணியாற்றி வரும் உமாகரன் ராசையா போன்ற இளம் தலைவர்கள் சிலரையும் அண்ணாமலை சந்தித்து நீண்ட நேரம் விவாதித்தனர்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வர இந்திய அரசு உதவ வேண்டும் அது பண உதவியாக மட்டுமல்லாது தொழில் பயிற்சி அளிப்பதாகவும் இருக்க வேண்டும்
தமிழ் மாணவர்கள் உயர்கல்வி பெறவும் உயிர்காக்கும் மருந்துகள் கிடைக்கவும் உதவ வேண்டும் என அண்ணாமலையிடம் அவர்கள் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அண்டை நாடாக மட்டும் பிரதமர் மோடி பார்க்கவில்லை ரத்த உறவாகவே பார்க்கிறார் இந்தியா என்று பலமாக இருக்கிறதே ஆயுத பலத்தில் மட்டுமல்லாது அறிவுசார் சிந்தனைகளும் உச்சத்தை அடைந்து இருக்கிறது. இன்று இந்தியா என்ன சொல்கிறது என்பதை உலகம் கவனிக்கிறது தமிழ் மக்களுக்கு மோடி அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என அவர்களிடம் அண்ணாமலை உறுதி அளித்துள்ளார்.
தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்து இல்லாமல் போனதால்தான் தமிழர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டது, எனவே தமிழகம் இலங்கை இடையே கடல் வழிப் போக்குவரத்து துவங்க வேண்டும் என இலங்கை தமிழர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி அமித் ஷாவிடம் பேசுவதாக அண்ணாமலை உறுதியளித்துள்ளார் இந்த பயணத்தின்போது இந்திய தூதரக அதிகாரிகளை சந்தித்து அண்ணாமலை யாழ்பாணம் சிறையில் ராமேஸ்வரம் மீனவர்களை சந்தித்து பற்றியும் மீனவர்கள் பிரச்சினை பற்றியும் அவர்களிடம் எடுத்துரைத்தார்.
இலங்கையில் இருந்தவாறு ஜே.பி.நட்டா அவர்களிடம் தொலைபேசியில் பேசிய அண்ணாமலை இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் உள்ள தமிழர்கள் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் பெரும் செல்வாக்கைப் பெற வேண்டுமானால் கச்சத்தீவை 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெறவேண்டும், தமிழகம் இலங்கை இடையே கடல் வழி போக்குவரத்து துவங்க வேண்டுமென ஆலோசனை கூறியுள்ளதாக பா.ஜ.க தரப்பு தெரிவிக்கிறது.
கடந்த 1974 இல் கச்சத்தீவை இந்திரா காந்தியை தாரைவார்த்த பொழுது பார்லிமென்டில் வாஜ்பாய் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையும் பா.ஜ.க முன்னாள் தேசிய தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி வழக்கு தொடர்ந்ததை ஜெ.பி.நட்டா'விடம் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். அதை தொடர்ந்து இலங்கையுடன் பேசியுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கச்சத்தீவு பிரச்சினை குறித்து முக்கியமாக விவாதித்ததாக கூறப்படுகிறது.
கச்சத்தீவை குத்தகைக்கு இந்தியா பெற்றால் அது பா.ஜ.க அரசின் சாதனையாக மட்டுமல்லாது அண்ணாமலையின் இலங்கை பயணத்திற்கு கிடைத்த வெற்றியாகவும் பார்க்கப்படும் என்கின்றர் தமிழக பா.ஜ.க'வினர்.
Source