ஸ்டாலினை விவாதத்திற்கு அழைத்த முதலமைச்சர்.. முந்திக்கொண்டு நான் வரேன் என்று பேட்டிக் கொடுத்த ராஜா.!
ஸ்டாலினை விவாதத்திற்கு அழைத்த முதலமைச்சர்.. முந்திக்கொண்டு நான் வரேன் என்று பேட்டிக் கொடுத்த ராஜா.!
By : Kathir Webdesk
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரடியாக விவாதத்திற்கு வருமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தில் அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திமுக எம்.பி., ராசா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர் ஒருவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவரை நேரடியாக விவாதம் நடத்த வருமாறு அழைப்பு விடுத்தார்.. இது பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு நான் (ராசா) விவாதத்திற்கு வருகிறேன். எந்த இடத்திற்கு வரவேண்டும் என்று சொல்லுங்கள் என கூறினார். மேலும், முதலமைச்சரிடம் 30 ஏக்கர் நிலம் உள்ளது. என்னிடம் 3 ஏக்கர் நிலம்கூட இல்லை. நான் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
ராசா 2ஜி வழக்கில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி பணத்தை ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் அவரிடம் 3 ஏக்கர் நிலம் கூட இல்லை எனறு கூறுவது மிகப்பெரிய பொய் என நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை வைக்கின்றனர்.