நாமக்கல்லில் முதலமைச்சரின் பிரச்சாரம் இப்படிதான் இருக்குமாம்.. அதிர்ச்சியில் தி.மு.க.,வினர்.!
நாமக்கல்லில் முதலமைச்சரின் பிரச்சாரம் இப்படிதான் இருக்குமாம்.. அதிர்ச்சியில் தி.மு.க.,வினர்.!
By : Kathir Webdesk
“வெற்றி நடைபோடும் தமிழகம்” என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரத்தை நாளை நாமக்கல்லில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்க உள்ளார்.
2021ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தற்போது இருந்து தங்களது பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். அ.தி.மு.க., சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை சேலம் மாவட்டத்தில் இருந்து ஆரம்பித்தார். இதன் பின்னர் நேற்று (27ம் தேதி) சென்னையில் அ.தி.மு.க., சார்பில் மிக பிரமாண்டமான முறையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், நாளை முதல் 3 நாட்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். நாளை (29ம் தேதி) நாமக்கலில் ஹனுமன் கோயிலுக்கு சென்று கோயில் வளாகத்தில் உள்ள வியாபாரிகள் மற்றும் பக்தர்களை நேரடியாக சந்திக்கவுள்ளார்.
பின்னர் லாரி மற்றும் கோழி பண்ணை தொழில்துறையினரின் பிரதிநிதிகளை சந்திக்கிறார். இதன் பிறகு ராசிபுரத்தில் உள்ள அருந்ததியர் காலனிக்கு சென்று ஒவ்வொரு வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளதாக அ.தி.மு.க.ல தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.
மேலும், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், குமாரபாளையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு, பின்னர் வீடு வீடாக வாக்கு சேகரிக்கவுள்ளார்.
மாவட்டம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதை அறிந்த உள்ளூர் தி.மு.க.வினர் அதிர்ச்சியில் உள்ளனர். முதலமைச்சரே நேரடியாக வீடுகளுக்கு செல்கிறார். ஆனால் நமது தலைவர் வேனில் இருந்தபடியே கையசைத்து விட்டு செல்கிறாரே என்று புலம்பிக் கொண்டுள்ளனர்.