Kathir News
Begin typing your search above and press return to search.

'தி.மு.க'கிட்ட இப்படி விட்டு குடுத்தா எப்படி நாம வளர்றது?' - தூத்துக்குடியில் அடித்துக்கொண்ட காங்கிரஸ் கட்சியினர்

தூத்துக்குடியில் நடந்த காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் அடித்துக்கொண்டு நாற்காலிகளை வீசி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது

தி.மு.ககிட்ட இப்படி விட்டு குடுத்தா எப்படி நாம வளர்றது? - தூத்துக்குடியில் அடித்துக்கொண்ட காங்கிரஸ் கட்சியினர்
X

Mohan RajBy : Mohan Raj

  |  2 Jun 2022 5:45 PM IST

தூத்துக்குடியில் நடந்த காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் அடித்துக்கொண்டு நாற்காலிகளை வீசி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது

தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஏ.பி.சி.டி சண்முகம் பேசுகையில் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று பேசினால் மட்டும் போதாது கட்சியை நாம் பலப்படுத்த வேண்டும்' என்றார்.

அப்போது மகிளா காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவரும், மாநில பொதுக் குழு உறுப்பினருமான திருமதி விஜயா இருக்கையில் இருந்து எழுந்து, 'தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் நீங்கள் யாருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தீர்கள் ஒரே வார்டில் தி.மு.க'வும் போட்டியிட்டது, காங்கிரஸ் போட்டியிட்டது ஏன் இதை நீங்கள் பேசி முடிக்கவில்லை இப்படி இருந்தால் கட்சி எப்படி பலம் பெரும்' என தொண்டர்கள் முன்னிலையில் கேட்டார்.

அப்போது மாநகராட்சி 34 வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் சந்திரபோஸ் குறிப்பிட்டு பேச முயன்றார். இதையடுத்து கூட்டரங்கில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளாக மாறியது, இரு தரப்பிற்கும் கைகலப்பு ஏற்பட்டு நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன.

தொடர்ந்து விஜயா கூட்ட அரங்கில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் வெளியே சென்றார், இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Source - News 18 Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News