Kathir News
Begin typing your search above and press return to search.

கழுத்தை பிடிச்சு தள்ளினாலும் தி.மு.க கூட்டணியை விட்டு காங்கிரஸ் போகாது - பங்கம் செய்த அண்ணாமலை

'தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வெட்டி ஒதுக்கக்கூடிய நிலையில் பிரிந்து கிடக்கிறது. அதற்காக பெவிகுய்க்கை வாங்கி கொடுக்க பாரதிய ஜனதா கட்சி தயாராக உள்ளது' என அண்ணாமலை பேசியது பரபரப்பாகியுள்ளது.

கழுத்தை பிடிச்சு தள்ளினாலும் தி.மு.க கூட்டணியை விட்டு காங்கிரஸ் போகாது - பங்கம் செய்த அண்ணாமலை
X

Mohan RajBy : Mohan Raj

  |  7 July 2022 7:29 PM IST

'தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வெட்டி ஒதுக்கக்கூடிய நிலையில் பிரிந்து கிடக்கிறது. அதற்காக பெவிகுய்க்கை வாங்கி கொடுக்க பாரதிய ஜனதா கட்சி தயாராக உள்ளது' என அண்ணாமலை பேசியது பரபரப்பாகியுள்ளது.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளை முன்னிட்டு கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, 'தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வெட்டி ஒதுக்கக்கூடிய நிலையிலேயே பிரிந்து கிடக்கிறது அதற்கான பெவிகுய்க்கை வாங்கி கொடுக்க பாரதிய ஜனதா கட்சி தயாராக உள்ளது, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இதனை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழக காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஐ.சி.யு'வில் உள்ளது, கழுத்தைப் பிடித்து தள்ளினாலும் போக மாட்டோம் என காங்கிரஸ் கட்சி தி.மு.க உடனே ஒட்டிக்கொண்டுள்ளது. தி.மு.க கொடுக்கும் ஆக்சிஜனை காங்கிரஸ் உயிர் வாழ்கிறது.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் 25 எம்.பி'க்களை பாரதிய ஜனதா கட்சி பெரும் கண்டிப்பாக பெறும் இதனை காங்கிரஸ்காரர்கள் பார்க்கத்தான் போகிறார்கள் என அவர் கூறினார்.

Source - Maalai Malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News