அவதூறாக பேசிய விவகாரம் - உதயநிதி மீது 4 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு
அவதூறாக பேசிய விவகாரம் - உதயநிதி மீது 4 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு
By : Mohan Raj
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், சசிகலா குறித்தும் அவதூறாக பேசியதாக
தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அ.தி.மு.க'வை சேர்ந்த
வழக்கறிஞர் ராஜலட்சுமி என்பவர் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சமீபத்தில் ஒரு புகார் அளித்திருந்தார்.
அதில், "பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் அநாகரிகமான முறையில் உதயநிதி பேசி இருக்கிறார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். மேலும் அந்த புகாருடன் உதயநிதி அவதூறாக பேசும் வீடியோ காட்சியையும் ராஜலட்சுமி அளித்திருந்தார்.
இதனைதொடர்ந்து ஆபாசமாக பேசுதல், தொழில்நுட்ப தகவல் சட்டம், பெண்களை இழிவாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் உதயநிதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதனால் அறிவாலய வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.