"பா.ஜ.க'வுடன் விவாதம் செய்ய இயலவில்லை" - ஊடக விவாதங்களில் இருந்து விலகிய தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள்.!
"பா.ஜ.க'வுடன் விவாதம் செய்ய இயலவில்லை" - ஊடக விவாதங்களில் இருந்து விலகிய தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள்.!
By : Mohan Raj
சரியாக ஐந்து ஆண்டுகள் முன்பு வரையில் திராவிட கட்சிகளின் பேச்சாளர்களின் ஆதிக்கம் சமூக வலைதளம், தொலைக்காட்சி ஊடகங்கள், பத்திரிக்கைகள், வார/மாத இதழ்கள் என அனைத்திலும் ஆதிக்கம் காணப்படும். மாறாக பா.ஜ.க சார்பில் மிக குறைந்த பேச்சாளர்களே காணப்படுவர். அதிலும் அவர்களுக்கு அதிகம் பேசவே வாய்ப்பு கிடைக்காது.
ஆனால் இன்றோ நிலைமையோ தலைகீழ் திராவிட கட்சிகளின் பேச்சாளர்கள் பேச இயலாமல் தவிக்கின்றனர் காரணம் தமிழக மக்களை வஞ்சித்து, ஏமாற்றி வயிற்றை கழுவி பிழைத்த சில கும்பல்கள் தமிழக மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதே காரணம். அதற்கு மூலக்காரணம் பா.ஜ.க. ஏனெனில் தமிழக திராவிட அரசியல் கட்சிகளின் முகத்திரையை குறிப்பாக தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் அரசியல் தலைவர்களின் முகத்திரையை கிழித்ததில் பா.ஜ.க'விற்கு மிகுந்த பங்குண்டு.
வாரிசு அரசியல், பரம்பரை பரம்பரையாக பதவி, தன் குடும்பத்தினரை மட்டும் தொழில்களில் அமைத்து ஊராரை வளரவிடாமல் செய்வது போன்ற கீழ்த்தரமான அரசியலை பா.ஜ.க'வின் மூலம் மக்கள் புரிந்துகொண்டனர்.
மேலும் பா.ஜ.க'வில் பெருகிவரும் இளம் அரசியல்வாதிகளுக்கு மற்றும் அவர்கள் எழுப்பும் நியாயமான கேள்விகளுக்கு தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் ஒரு வார்த்தை கூட பதில் கூற முடியவில்லை! காரணம் பா.ஜ.க'வினரின் நியாயமான கேள்விக்கு நியாயமற்ற தி.மு.க'வினரிடத்தில் பதில் இல்லை. இதனை தொடர்ந்து தற்பொழுது தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஒர் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
அதாவது, "பா.ஜ.க பிரதிநிதிகள் பங்கேற்கும் ஊடக விவாதங்களில் தி.மு.க மற்றும் அதன் தோழமைக் கட்சிகளுடைய பிரதிநிதிகள் பங்கேற்பதில்லை என தி.மு.க. தலைமையிலான தோழமைக் கட்சிகளின் ஊடகக் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தி.மு.க தலைமையிலான தோழமைக் கட்சிகளின் ஊடகக் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நேற்று (06.11.2020) இணைய வழியில், தி.மு.க தலைமையிலான தோழமைக் கட்சிகளின் ஊடகக் கண்காணிப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பேரா.கான்ஸ்டன்டைன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் அருள்மொழி, காங்கிரஸ் கோபண்ணா, சி.பி.ஐ மகேந்திரன், சி.பி.எம் கனகராஜ், ம.தி.மு.க மல்லை சத்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சி ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், "பா.ஜ.க பிரதிநிதிகள் பங்கேற்கும் ஊடக விவாதங்களில் தி.மு.க மற்றும் அதன் தோழமைக் கட்சிகளுடைய பிரதிநிதிகள் பங்கேற்பதில்லை" என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குற்றமுள்ள நெஞ்சங்கள் பேசவே அஞ்சுகின்றன.