நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்த தி.மு.க மாவட்ட செயலாளர்: ஆட்சியர் அலுவலகத்தில் கதறும் குடும்பம்!
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை என்பவர் இஸ்லாமியர்களின் நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்ததாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
By : Thangavelu
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை என்பவர் இஸ்லாமியர்களின் நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்ததாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் மீண்டும் நிலஅபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து போன்றவைகள் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பாவி பொதுமக்கள் என்னசெய்வது என்று தெரியாமல் புலம்பி வருவதையும் சமீபகாலமாக நடைபெறும் நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகிறது. அது போன்று தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் செல்லத்துரை. இவர் திமுக ஆட்சியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இஸ்லாமிய குடும்பத்தின் சொத்தை அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லத்துரை நில அபகரிப்பு மோசடி செய்வதாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்த இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்தவர்கள் pic.twitter.com/G02gSo5cOH
— Gowri Sankar D (@GowriSankarD_) November 24, 2021
இஸ்லாமிய குடும்பம் தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றையும் அளித்தனர். அதன்பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, எங்களின் பரம்பரை சொத்தை தாத்தா, அப்பா வைத்திருந்ததை தங்களுக்கு கொடுத்தாக வேண்டும் என்று மிரட்டல் விடுத்தார். இதனால் கடந்த ஆண்டு எங்க அப்பா மனஉளைச்சலில் இருக்கும்போது நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்து போனார். தற்போது எங்களின் குடும்பத்தை மிரட்ட துவங்கியுள்ளார். பரம்பரையாக வைத்திருக்கும் நிலத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்தார். அது மட்டுமின்றி உங்களின் நிலம் ஏற்கனவே எனது பெயருக்கு மாறிவிட்டதாக செல்லத்துரை மிட்டியுள்ளார்.
மேலும், நாங்கள் பரம்பரையாக விவசாயம் செய்து வந்த நிலத்தை எக்காரணத்தை கொண்டும் திமுக மாவட்ட செயலாளர் செல்லத்துரைக்கு விட்டுக்கொடுக்க மாட்டோர். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy:Twiter