"மத விஷயங்களில் தலையிட கூடாது என இப்பொழுதுதான் தி.மு.க'விற்கு புரிய துவங்கி உள்ளது" - வானதி சீனிவாசன் சுளீர்
'மத விஷயங்களில் தி.மு.க அரசு தலையிடாமல் இருப்பது நல்லது' என எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

By : Mohan Raj
'மத விஷயங்களில் தி.மு.க அரசு தலையிடாமல் இருப்பது நல்லது' என எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும், எம்.எல்.ஏ'வுமான வானதி சீனிவாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 'இறைவனை வணங்க மொழி தடையாக இருக்கக்கூடாது என்பதுதான் பா.ஜ.க'வின் நிலைப்பாடு' என தெரிவித்தார்.
'அதேவேளையில் எந்த மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது பக்தர்களின் உரிமையை சார்ந்தது எனவே ஏற்கனவே கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற போர்டு வைக்கப்பட்டு இருக்கிறது பக்தர்கள் விரும்பினால் தமிழ் அர்ச்சனை செய்து கொடுக்கின்றனர், தமிழ் மட்டும்தான் வைத்து செய்ய வேண்டும் என யாரையும் வற்புறுத்த முடியாது' எனவும் தெரிவித்தார்.
அதேசமயம் அதற்காக இன்னொரு மொழியைப் புறக்கணிக்க தேவையில்லை என தெரிவித்த அவர் தமிழ் நம் தாய்மொழி, சமஸ்கிருதம் நம் நாட்டின் மொழி என தெரிவித்த அவர் யாருக்கு எதில் விருப்பமோ அதில் வழிபாடு செய்யலாம்' எனவும் தெரிவித்தார்.
மேலும், 'அரசு மத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது எனவும் அது இப்போதுதான் தமிழக அரசுக்கு மெல்லப் புரியத் துவங்கி இருக்கிறது. எனவும் பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவரும் எம்.எல்.ஏ'வுமான வானதி சீனிவாசன் கூறினார்.
