"பணம் தரோம் வாம்மா"ன்னு கூட்டிட்டு போய் வடை கொடுத்த பரிதாபம்; அண்டாவுடன் தப்பிய தி.மு.க-வினர் - கிராம சபை பரிதாபங்கள்!
"பணம் தரோம் வாம்மா"ன்னு கூட்டிட்டு போய் வடை கொடுத்த பரிதாபம்; அண்டாவுடன் தப்பிய தி.மு.க-வினர் - கிராம சபை பரிதாபங்கள்!
By : Mohan Raj
கிராம சபை கூட்டம் என்ற பெயரில் தி.மு.க கூட்டம் நடைபெறும் பகுதிகளில் மக்களை சேர்க்க தி.மு.க-வினர் படாதபாடு படுகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பொது மக்களுக்கு டோக்கன் குடுத்து "மக்கள் கிராம சபை" கூட்டத்திற்கு தி.மு.க-வினர் ஆள் சேர்த்தனர்.
விருதுநகர் மாவட்டம் மலையடிப்பட்டியில் மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் தி.மு.க கூட்டம் நடைபெற்றது. தி.மு.க எம்.எல்.ஏ தங்கபாண்டியன் மற்றும் மாவட்ட செயலாளர் இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பொதுமக்கள் வர மாட்டார்கள் என்பதால் கூட்டத்திற்கு வருபவர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் தருவதாக கூறி ஆசைவார்த்தை காண்பித்து உதயசூரியன் சின்னத்தை அச்சடித்து டோக்கன் வழங்கியுள்ளனர்.
இதனை வழக்கம் போல் நம்பி மக்களும் டோக்கனை வாங்கி கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். ஆனால் தி.மு.க-வினர் எப்போதும் போல் "நாங்க சொன்னா செய்வோமா?" என்கிற ரீதியில் கூட்டம் முடிந்தவுடன் வடையும், டீயும் கோடுத்துவிட்டு மக்களை ஏமாற்றியுள்ளனர். அதிலும் வடையை சிலருக்கு கொடுத்துவிட்டு மீதியை அண்டாவுடன் தூக்கி கொண்டு ஓடினர். இதனால் ஏமாற்றமடைந்த மக்கள் தி.மு.க-வினர் பின் பாவமாக ஓடினர்.
For a Grama Sabha meet at Virudhunagar dist, DMK members have distributed token promising them money if they participate in the meet. After the meet, only Vada and Tea was given to them. That too Vada was not distributed to everyone.
— Pranesh Rangan (@PraneshRangan) January 3, 2021
What a Vada Poche moment!#திருட்டு_திமுக pic.twitter.com/NSIgrBEqDM
பணம், பொருள் என தி.மு.க-வின் ஆசை வார்த்தைகளை நம்பி வேலைக்கு கூட செல்லாமல் கூட்டத்தில் டோக்கன் வாங்கி உட்கார்ந்த மக்கள் கடைசியில் தி.மு.க-வினரால் வழக்கம்போல் ஏமாற்றப்பட்டு வடைக்காக தி.மு.க-வினர் பின் ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source & Image Credits - NEWS J