Kathir News
Begin typing your search above and press return to search.

கிராம சபை கூட்ட நாடகத்திற்காக மக்களை சேற்றில் உட்கார வைத்து கொடுமைபடுத்திய தி.மு.க'வினர்

கிராம சபை கூட்ட நாடகத்திற்காக மக்களை சேற்றில் உட்கார வைத்து கொடுமைபடுத்திய தி.மு.க'வினர்

கிராம சபை கூட்ட நாடகத்திற்காக மக்களை சேற்றில் உட்கார வைத்து கொடுமைபடுத்திய தி.மு.கவினர்

Mohan RajBy : Mohan Raj

  |  6 Jan 2021 6:30 AM GMT

தி.மு.க வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வென்று ஸ்டாலின் முதல்வராகிவிட வைண்டும் என துடிக்கிறது. இந்த அரசியல் பதவி வெறியின் வெளிப்பாடாக பல்வேறு நாடக திட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர். அதில் தற்போதைய அரசியல் தேர்தல் நாடகம் "கிராம சபை கூட்டம்" என்ற பெயரில் தி.மு.க'வினரையும், குறிப்பாக கிராமங்களில் உள்ள பெண்களையும் ஓரிடத்தில் கூட வைத்து அதில் தி.மு.க தலைவர்களை பங்கேற்க வைத்து அதன் மூலம் 'பாருங்கள் ஆளும் அரசின் மீது மக்கள் எவ்வளவு வெறுப்புடன் இருக்கிறார்கள் என்ற பொய்யான கருத்தை பதிய வைக்கும் நிகழ்வு. அந்த வகையில் இந்ந நாடக கிராம சபை கூட்டத்தின் கொடூர நிகழ்வாக பெண்களை சேற்றில் உழலவைத்து அதனை கிராம சபை கூட்டமாக காண்பித்து விளம்பரபடுத்தியதே.

நேற்று (04.01.2020) கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில், தெற்கு ஒன்றியம் பாதிரிக்குப்பம் ஊராட்சிப் பகுதியில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட இடமே முதலில் தொண்டர்களை அவஸ்தைக்குள்ளாக்கி முகம் சுளிக்க வைத்தது. தரையில் கால் வைத்தால் அரை அடிக்கு உள்ளே செல்லுமளவுக்கு சேறும்,சகதியும் இருந்த இடத்தில் சிவப்பு நிற தரை விரிப்பு போடப்பட்டிருந்தது. மாலை 4 மணிக்கு ஸ்டாலின் வருவதாகக் கூறப்பட்டிருந்ததால் 3 மணிக்கே அந்த இடத்தில் பெண்கள் தரையில் அமரவைக்கப்பட்டார்கள்.

சிறிது நேரத்தில் தரைவிரிப்பைத் தாண்டி சேறும் நீரும் மேலே வந்துவிட்டதால் அங்கு அமர்ந்திருந்த பெண்களும், பெரியவர்களும் நெளியத் தொடங்கினர். தரைவிரிப்பு முழுவதும் ஈரமாகிவிட்டதால், இடம் மாறி மாறி உட்கார்ந்தும் பயனில்லாமல் போனது. `தலைவர் இதோ வருகிறார்... அதோ வருகிறார்... அதோ வந்து விட்டார்' என்று நிர்வாகிகள் தொடர்ந்து பில்டப் குடுத்துக்கொண்டே இருந்ததால் சேறு, சகதி கொடுமையை தாண்டி உடன்பிறப்புகளின் கொடுமையை சகித்துக்கொள்ள வேண்டிய நிலை வேறு அங்கு வந்ந கூட்டத்திற்கு ஏற்பட்டது. வேறு வழியில்லாமல் அந்தச் சேற்றிலேயே அமர்ந்திருந்தனர் மக்கள்.

பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அங்கு அமரவைக்கப்பட்டிருந்த அனைவரின் கால்களும் உடைகளும் சேற்று நீரில் முழுக்க ஈரமாகின. ஸ்டாலினுக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையிலும் இதேநிலைதான். மாலை 5:30 மணிக்கு ஸ்டாலின் வருவதற்கு முன்பாக அந்த இடத்தில் மட்டும் ஏற்கெனவே தயாராகவைத்திருந்த மற்றுமொரு புதிய விரிப்பை ஸ்டாலின் மீது சேறு பட்டுவிட கூடாதென்று பாதுகாப்பாக விரித்தார்கள்.

இறுதியாக ஸ்டாலின் வரும் வரையில் பொறுத்துக்கொள்ளாத பெண்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் அங்கிருந்து நகர கூட்ட ஏற்பாட்டாளர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இறுதியில் ஸ்டாலின் வருகையில் மக்கள் கூட்டத்தை விட சேறு படிந்த தரையை பார்த்து பேச வேண்டிய நிலை ஏற்பட்டது தி.மு.க தலைவருக்கு.

தன் பதவி ஆசைக்காக மக்களை சேற்றில் புரளவைத்த ஸ்டாலினின் செயலை கண்டு அந்த பகுதி மக்கள் வெறுப்படைந்தனர்.

Source - ஜூனியர் விகடன்,

Images - ஜூனியர் விகடன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News