Begin typing your search above and press return to search.
மக்கள் பா.ஜ.க.வுடன் உள்ளார்கள்: தேர்தல் வெற்றி பற்றி குஷ்பு!
தேர்தல் வெற்றி குறித்து குஷபு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மக்கள் பாஜகவுடன் இருப்பதை தேர்தல் வெற்றி மூலம் தெளிவாகிறது. கட்சியின் மீதும், நமது பாரத பிரதமர் மோடியின் அதிகமான நம்பிக்கையை யாராலும் தடுக்க முடியாது.

By :
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று காலை (மார்ச் 10) முதல் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி உபி, உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 4 மாநிலங்களில் பாஜகவே முன்னிலை வகித்து வருகிறது. எனவே இந்த 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், தேர்தல் வெற்றி குறித்து குஷபு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மக்கள் பாஜகவுடன் இருப்பதை தேர்தல் வெற்றி மூலம் தெளிவாகிறது. கட்சியின் மீதும், நமது பாரத பிரதமர் மோடியின் அதிகமான நம்பிக்கையை யாராலும் தடுக்க முடியாது.
மேலும் இந்திய தேசிய காங்கிரஸ் சிதைந்துவிட்டது. மக்களுடன் இருப்பவர்களுக்கு மட்டுமே மக்கள் வாக்களிப்பார்கள். எனவே இதனை நாங்கள் செய்கிறோம். இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story