முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்! இன்று ஓய்கிறது முதற்கட்ட பரப்புரை!
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதற்கட்ட தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது.
By : Thangavelu
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதற்கட்ட தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது.
தமிழகத்தில் விடுப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் வருகிறது. அதன்படி வருகின்ற 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலையுடன் பரப்புரை ஓய்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 39 ஊராட்சி ஒன்றியங்கள், அதனைச் சுற்றியுள்ள 5 கி.மீ. தொலைவு வரை உள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் 6ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மதுக்கடைகளை திறக்க மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும், வெளியாட்கள் இன்று மாலை 5 மணிக்குள் வெளியேறவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Source: News 7 Tamil
Image Courtesy:Zee News