மீன் கருவாடு ஆகும்.. மீண்டும் மீனாக மாறாது.. தே.மு.தி.க., மீது எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா கருத்து.!
மீன் கருவாடு ஆகும்.. மீண்டும் மீனாக மாறாது.. தே.மு.தி.க., மீது எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா கருத்து.!
By : Kathir Webdesk
அடுத்த ஆண்டு நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் தங்களது கூட்டணிகளை இறுதி செய்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்த கட்சிகளிடையே மீண்டும் திமுக கட்சி கூட்டணி தொடர வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
அதே போன்று அதிமுக கூட்டணியில் தற்போது யார் யார் வெளியேறுவார்கள், யார் யார் உள்ளே இருப்பார்கள் என்று இன்னும் தெரியவில்லை.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக இடம் பெறுவது அக்கட்சிக்குத் தான் நல்லது என மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
வண்டியூரில் சவுராஷ்டிரா புரத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குளத்தில் இருந்து மீன் வெளியே சென்றால் கருவாடாகி விடும். மீண்டும் மீனாக மாறாது என கூறினார்.
இவரது பேச்சு தற்போது தேமுதிக கட்சியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவர்கள் அதிமுகவில் இருப்பார்களா அல்லது வேறு ஏதேனும் கூட்டணி வைப்பார்களா என தெரியவில்லை.