Kathir News
Begin typing your search above and press return to search.

ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட காத்திருக்கும் முக்கிய வேட்பாளர்கள் -  எளிய இலக்காகி போன தி.மு.க'வின் முதல்வர் வேட்பாளர்

ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட காத்திருக்கும் முக்கிய வேட்பாளர்கள் -  எளிய இலக்காகி போன தி.மு.க'வின் முதல்வர் வேட்பாளர்

ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட காத்திருக்கும் முக்கிய வேட்பாளர்கள் -  எளிய இலக்காகி போன தி.மு.கவின் முதல்வர் வேட்பாளர்

Mohan RajBy : Mohan Raj

  |  13 Jan 2021 8:00 AM GMT

தி.மு.க தலைவர் கருணாநிதியின் அரசில் வரலாற்றில் அவர் ஒருமுறை கூட தோல்வியை தழுவியதில்லை. அவர் இறுதிகாலத்தில் போட்டியிட்ட திருவாரூர் தொகுதியில் கூட அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க'வின் ஏ.என்.ஆர்.பன்னீர் செல்வத்தை வீழ்த்தி வெற்றியை பறித்தார். காரணம் கருணாநிதி போட்டியிடுகிறார் என்றால் எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் இறங்கி வேலை செய்யவே அஞ்சுவர். சிலர் போட்டியை சந்திக்காமலேயே விலகிவிடுவர். தி.மு.க'வின் முன்னாள் தலைவரான கருணாநிதியின் வரலாறு அவ்வாறு இருக்கும் போது அவரது மகன் என்ற அடையாளத்தை முன்வைத்து தி.மு.க தலைவர் பதவியை பறித்த ஸ்டாலின் நிலையோ அப்படியே நேர் மாறாக இருக்கிறது. அ.தி.மு.க, பா.ஜ.க, நாம் தமிழர் ஆகிய கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் "நான் ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிடுவேன் என ஆணித்தரமாக அறிவித்துள்ளனர். அந்தளவிற்கு ஸ்டாலின் நிலை அரசியல் அரங்கில் கேள்விக்குறியாகியுள்ளது.

பா.ஜ.க'வின் குஷ்பு மதுரையில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற வேளையில், "யாரிடமும் ஆதரவு கேட்கும் நிலையில் பா.ஜ.க இல்லை. தி.மு.க தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் போட்டியிடவும் தயாராக இருக்கிறேன்" என தைரியமாக கூறினார்.

மேலும், செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் சீமான் கூறியதாவது, "வருகிற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடுவேன்" என்று அவர் அறிவித்தார்.

மேலும் அவர், ``எந்தத் தொகுதியில் ஸ்டாலின் களமிறங்கினாலும், அங்கு நான் போட்டியிடுவது உறுதி. இந்தத் தேர்தலில் தி.மு.க'வுக்கு மாற்று அ.தி.மு.க இல்லை. நாம் தமிழர் கட்சிக்கும் தி.மு.க'வுக்கும்தான் போட்டி. அ.தி.மு.க எதிர்க்க வேண்டிய கட்சியே அல்ல” என்று சீமான் கூறியுள்ளார்.

இது இவ்வாறு இருக்க ஸ்டாலினுக்கு எதிராக அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார், சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார், "ராயபுரம் தொகுதியில் என்னை எதிர்த்துப் போட்டியிட ஸ்டாலின் தயாரா?’’ என சவால்விடும் வகையில் பேசியுள்ளார்.

இப்படி பா.ஜ.க, நாம் தமிழர், அ.தி.மு.க ஆகிய கட்சிகளின் நட்சத்திர வேட்பாளர்களின் இலக்காக தி.மு.க தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் தொகுதி இருக்கிறது. அவ்வளவு சுலபமாக போய்விட்டதா தி.மு.க முதல்வர் வேட்பாளரின் நிலை? முதல்வர் வேட்பாளருக்கே இந்த நிலை என்றால் மற்ற வேட்பாளர்களுக்கு என்ன நிலையோ?

Next Story
கதிர் தொகுப்பு
Trending News