Begin typing your search above and press return to search.
தெருக்கூத்து பார்த்து ரொம்ப நாளாச்சு என்ற ஏக்கம் தீர்ந்தது: சசிகலா குறித்து மறைமுக ட்வீட் போட்ட ராமதாஸ்.!
தெருக்கூத்து பார்த்து ரொம்ப நாளாச்சு என்ற ஏக்கம் தீர்ந்தது: சசிகலா குறித்து மறைமுக ட்வீட் போட்ட ராமதாஸ்.!

By :
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எப்போதும் ட்வீட்டரில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அரசியல் விமர்சனங்கள் உள்ளிட்டவை உடனடியாக தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
அதே போன்று நேற்று சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தண்டனை முடிந்து சென்னை திரும்பிய சசிகலா, தேசிய நெடுஞ்சாலையில், தனது ஆதரவாளர்களை அழைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் மற்றும் பட்டாசு வெடித்து தனது சென்னை நோக்கிய பயணம் இருந்தது.
இந்நிலையில், சசிகலா வருகை குறித்து டாக்டர் ராமதாஸ் மறைமுகமாக சாடி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘தெருக்கூத்து பார்த்து ரொம்ப நாளாச்சு என்ற சென்னைவாசியின் நீண்டநாள் ஏக்கம் தீர்ந்தது’ என்று ட்வீட் செய்துள்ளார். ராமதாஸ் ட்வீட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Next Story