பெண்களுக்கு அதிகாரம் அளிக்க முயற்சி செய்தவர்.. எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில் பிரதமர் மோடி தமிழில் ட்வீட்.!
பெண்களுக்கு அதிகாரம் அளிக்க முயற்சி செய்தவர்.. எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில் பிரதமர் மோடி தமிழில் ட்வீட்.!
By : Kathir Webdesk
அதிமுக நிறுவனரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாள் இன்று (17ம் தேதி) கொண்டாடப்படுகிறது.
வருடம்தோறும் இந்த தினத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அதிமுகவினர் உற்சாகமாக பிறந்த நாள் விழாவை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “பாரத ரத்னா எம்.ஜி.ஆர்., பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு எனது புகழ் வணக்கம்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் எம்.ஜி.ஆர் அவர்கள் திரையுலகிலும், அரசியலிலும் பரவலாக மதிக்கப்பட்டார் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, அவர் முதலமைச்சராக இருந்தபோது, வறுமையை ஒழிக்கவும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பல முயற்சிகளைத் தொடங்கினார் என்று தெரிவித்துள்ளார்.