எங்களுக்கு தேவை விளம்பரம் தான் - காவல்துறை அனுமதியை மீறி நாளை போராட்டம் நடத்த இருக்கும் தி.மு.க.!
எங்களுக்கு தேவை விளம்பரம் தான் - காவல்துறை அனுமதியை மீறி நாளை போராட்டம் நடத்த இருக்கும் தி.மு.க.!

சென்னையில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதையும் பொருட்படுத்தாது கட்டுப்பாடுகளை மீறி உண்ணாவிரதம் போராட்டம் இருக்க போவதாக தி.மு.க அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டெல்லியில் 20 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டம் நாளை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் போராட்டங்கள் நடைபெறும் இடத்தில் உண்ணாவிரதம் இருக்க தி.மு.க சார்பில் அனுமதியும் கோரப்பட்டு இருந்தது. ஆனால் சென்னையில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது மேலும் இதனை கடிதம் வாயிலாகவும் தி.மு.க'விற்கு தெரியபடுத்தியுள்ளது.
ஆனால் இதனை பொருட்படுத்தாமல் நாளை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தி.மு.க அறிவித்துள்ளது. மக்களையும், மக்கள் நலன்களையும் தி.மு.க மதிக்காமல் தன் விளம்பரத்தில் மட்டும் தி.மு.க குறிக்கோளாக இருப்பதே இதற்கு காரணம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றன.