நகராட்சி, உள்ளாட்சி வெற்றியால் குஜராத் மக்கள் பிரதமர் மோடியின் பக்கம் உள்ளனர்: முதலமைச்சர் பெருமிதம்!
குஜராத் நகராட்சி மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் பாஜக பெற்ற அமோக வெற்றியால் மக்கள் என்றும் பிரதமர் மோடியின் பக்கம் இருப்பதை இத்தேர்தல் நிரூபித்துள்ளது என்று அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் கூறியுள்ளார்.
By : Thangavelu

குஜராத் மாநிலம், காந்தி நகர் மாநகராட்சி தேர்தலில் மொத்தம் 44 இடங்களில் ஆளும் பாஜக அரசு 41 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் இரண்டு இடங்களிலும், ஆம் ஆத்மி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
இது பற்றி குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் கூறியதாவது: காந்தி நகர் மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜகவுக்கு வெற்றியை தந்த மக்களுக்கு நன்றி. இதன் மூலம் குஜராத் மக்கள் என்றுமே பிரதமர் மோடியின் பக்கம் இருப்பதை இந்த வெற்றி மீண்டும் நிரூபித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக வாட்டி வதைத்து வரும் கொரோனா தொற்றின் காலத்திலும் பாஜகவினர் பொதுமக்களுக்கு ஓடி, ஓடி சேவை செய்தனர். இதன் காரணமாகவே மக்கள் மீண்டும் பாஜகவை வெற்றிபெற செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Dinamalar
https://www.dailythanthi.com/News/TopNews/2021/10/06055832/The-first-phase-of-voting-in-the-9-district-rural.vpf