Kathir News
Begin typing your search above and press return to search.

பரபரப்பு! உதயநிதியை ஓட ஓட விரட்டிய திருமானூர் மக்கள்!

பரபரப்பு! உதயநிதியை ஓட ஓட விரட்டிய திருமானூர் மக்கள்!

பரபரப்பு! உதயநிதியை ஓட ஓட விரட்டிய திருமானூர் மக்கள்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  24 Dec 2020 11:16 PM IST

தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் வேளையில் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் திராவிட முன்னேற்ற கழகத்தினர் மட்டும் அடி வாங்கி திரும்பி வருகின்றனர். மக்கள் மத்தியில் அந்தளவிற்கு தி.மு.க'வினர் வெறுப்பை சம்பாதித்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்கள் முன்பு தயாநிதி எம்.பி அவர்கள் பா.ம.க'வை பற்றி கூறிய அர்த்தமற்ற வார்த்தைகளில் வெறுப்படைந்த பா.ம.க'வினர் சேலத்தில் தயாநிதி மாறனை சுற்றி வளைத்தனர். இதனால் விட்டால் போதும் என திரும்ப ரயில் ஏறி சென்னை ஓடிவிட்டார். பின் சிதம்பரத்தில் உதயநிதி முகத்தில் மனுவை வீசியெறிந்து தனது ஆத்திரத்தை தொண்டர் வெளிப்படுத்தியதால் உதயநிதி அசிங்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து இன்று அரியலூர் மாவட்டம் திருமானூரில் உதயநிதியை ஊர்மக்கள் ஓட விட்டிருக்கிறார்கள். விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பெயரில் தமிழகத்தில் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் உதயநிதி ஸ்டாலின் இன்று அரியலூர் மாவட்டம் திருமானூரில் பேச உள்ளார். அதற்காக திருமானூரில் உள்ள மூப்பனார் அரங்க மேடை அலங்கரிக்கப்பட்டுள்ளது

அது அரசு நிதியில் கட்டப்பட்ட அரங்க மேடை. அந்த மேடைக்கு மூப்பனார் அரங்க மேடை என்று உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகம் பெயர் சூட்டி இருந்தது

அந்த மேடையில் உதயநிதி ஏறி பிரச்சாரம் செய்வதற்காக அதை சினிமா செட் போல் மாற்றியுள்ளனர். இந்த சந்தடி சாக்கில் அந்த அரங்கமேடையின் முகப்பு பகுதியில் எழுதப்பட்டிருந்த மூப்பனார் பெயரை அழித்துள்ளனர். இது தி.மு.க'வினரின் திட்டமிட்ட செயல் என்று பொதுமக்கள் கோபமடைந்த நிலையில்.

மாலை அந்த பகுதிக்கு வந்த உதயநிதியை சுற்றி வளைத்தனர். உதயநிதியும் காரில் அமர்ந்தபடியே அனைவரையும் சமாளிக்க முடியாமல் திணறினார். உடனே பாதுகாவலர்கள் சுற்றி வளைத்து உதயநிதியின் வாகனத்தை வேகமெடுத்ததால் அங்கிருந்து உதயநிதி தப்பினார்.

இதற்கு தான் கட்சி வரலாறு தெரியாதவர்களை நம்பினால் இந்த கதி என மூத்த உடன்பிறப்புகள் புலம்பி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News