Kathir News
Begin typing your search above and press return to search.

சாதகமாக திசை மாறும் மேற்கு வங்க அரசியல் களம் - வெற்றிக்கொடி நாட்டுமா பா.ஜ.க.?

சாதகமாக திசை மாறும் மேற்கு வங்க அரசியல் களம் - வெற்றிக்கொடி நாட்டுமா பா.ஜ.க.?

சாதகமாக திசை மாறும் மேற்கு வங்க அரசியல் களம் - வெற்றிக்கொடி நாட்டுமா பா.ஜ.க.?

Saffron MomBy : Saffron Mom

  |  21 Dec 2020 6:30 AM GMT

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தற்போதைய மேற்கு வங்காள சுற்றுப்பயணம் அம்மாநிலத்தின் அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய திருப்பு முனையாக அமையலாம்.

பா.ஜ.கவின் பலத்தை நிரூபிக்கும் விதத்தில் நேற்று (டிசம்பர் 19) மெடினிப்பூரில் நடந்த மிகப்பெரிய கூட்டம் மற்றும் திரிணாமுல் காங்கிரஸின் மிக மூத்த தலைவர்கள் பலரும் பா.ஜ.கவில் இணைந்தது ஆகியவற்றின் மூலம் சில முக்கியமான செய்திகளை பா.ஜ.க அனுப்பியுள்ளது.

திரிணாமுல் காங்கிரசின் தாக்குதல்கள், மிரட்டல்கள் பயமுறுத்தல்களுக்கு பா.ஜ.க பயப்பட போவதில்லை. சொல்லப்போனால் பொதுமக்களிடம் பா.ஜ.கவை சென்றடைய வைப்பதற்கான பல தெருமுனைப் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள், வீடுவீடாக செய்யப்படும் தேர்தல் பரப்புரைகள் என தங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகளை பா.ஜ.க மிக வேகமாக எடுத்துக் கொண்டிருக்கிறது.

மேற்கு வங்காளத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசை எதிர்த்து முழுவீச்சுடன் தீவிரமான பிரச்சாரம் செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அமித்ஷாவின் பேச்சு அமைந்தது.

திரிணாமுல் காங்கிரஸின் சொந்த இடத்திற்கே சென்று அவர்களை எங்கே தாக்கினால், அதிக பாதிப்பு இருக்குமோ அதைத் துல்லியமாக பா.ஜ.க செய்து கொண்டிருக்கிறது.

சனிக்கிழமையன்று (டிசம்பர் 19) ஒரு லோக்சபா MP, 10 எம்எல்ஏக்கள் (திரிணாமுல் காங்கிரசிலிருந்து 7 பேர், இடதுசாரிகள் இரண்டு பேர், காங்கிரஸில் இருந்து ஒருவர்) இரண்டு முன்னாள் எம்பிக்கள், 60 கவுன்சிலர்கள், ஜில்லா பரிஷத், பஞ்சாயத்து உறுப்பினர்கள் (கிட்டத்தட்ட அனைவருமே திரிணாமூலை சேர்ந்தவர்கள்) பா.ஜ.கவிடம் இணைந்திருப்பது மேற்குவங்காள வரலாற்றில் இதுவரை நடைபெறாத ஒன்றாகும்.

லோக்சபா தேர்தல் முடிவுகள் கடந்த வருடம் வந்ததிலிருந்து, திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த பலரும் பா.ஜ.கவில் இணைய தயாராக இருப்பதாக பாஜக கூறிவந்தது. ஆனால் பலரும் இதை நம்பவில்லை. ஆனால் நேற்று நடந்த நிகழ்வுகள் இவை சில பல காலமாக தொடர்ந்து திட்டமிட்ட நிகழ்வுகள் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

பல அரசியல்வாதிகளும் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களும் பா.ஜ.கவில் இணைவது, பா.ஜ.க மேற்குவங்காளத்தில் அமைப்பு ரீதியாக மிகவும் பலம் அடைந்துள்ளதை காட்டுகிறது. இது மட்டுமல்லாமல் பா.ஜ.கவை குறித்துத் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகியோர் கட்டவிழ்த்து வந்த அவதூறுப் பிரச்சாரம் முடிவுக்கு வந்து விட்டதைக் காட்டுகிறது. பா.ஜ.கவில் இணைவது மேற்குவங்காளத்தில் தற்பொழுது மிகவும் கவர்ச்சிகரமான ஒரு விஷயமாக காணப்படுகிறது.

Amit Shah

பா.ஜ.க வெளி ஆட்கள் கட்சி என்று திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சுமத்தி வந்தது கொஞ்சம் கூட பலனளிக்கவில்லை. பா.ஜ.க இதற்கெல்லாம் கொஞ்சம் கூட சளைக்காமல் வெளிமாநிலங்களில் இருந்து தன்னுடைய தலைவர்களை மேற்கு வங்காளத்திற்கு தொடர்ந்து அனுப்பி வந்தது.

பா.ஜ.கவில் பல முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தலைவர்கள் இணைவது அக்கட்சி வெளியாட்கள் கட்சி அல்ல என்பதை உறுதிப்படுத்துகிறது. அமித்ஷாவின் பேரணியில் வந்து குவிந்த கூட்டமும் இது பெங்காலிகளுக்கும், வெளியாட்களுக்கும் இடையிலான போட்டி என்ற விவாதத்தை சுக்குநூறாக்குகிறது.

மத்திய அரசுக்கு எதிரான அவதூறுகள் இனிமேலும் மேற்குவங்காளத்தில் வேலைக்கு ஆகாது. இடதுசாரிகள், திரிணாமுல் என இரு கட்சிகளும் அம்மாநிலத்தை ஆட்டுவித்து வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் மத்திய அரசே காரணம் என்று இதுவரை குற்றம் சுமத்தி, தங்கள் கடமைகளை தட்டிக்கழித்து வந்தன.

ஆனால் சுவெந்து ஆதிகாரி கூறியது போல, சனிக்கிழமை நடந்த நிகழ்வுகள் பெங்கால் வரலாற்றில் இப்படி தோல்விகரமான சிந்தனைகளுக்கு ஒரு முடிவு கட்டும் விதமாக இருப்பதாக இருக்கும்.

மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான ஒரு நல்ல உறவை மேற்குவங்காளம் 1977 க்கு பிறகு இழந்துவிட்டது. சனிக்கிழமை நடந்த பேரணி இதற்கெல்லாம் முடிவு கட்டி, ஒரு புதிய சகாப்தத்தை ஆரம்பித்து வைக்கலாம்.

பா.ஜ.க, மமதா பானர்ஜிக்கு எதிரான தாக்குதல்களை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதிகாரி, அபிஷேக் பானர்ஜியைத் தாக்கி பேசியது, அதை அமித்ஷா வரவேற்றது ஆகியவை திரிணாமுல் கட்சித் தலைவருக்கும் அவருடைய மருமகனுக்கும் நாங்கள் நேரடியாக மோத தயார் என்பதை அறிவுறுத்தும் விதமாக இருந்தது.

மமதா பானர்ஜி

மூத்த தலைவர்களே திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகியிருப்பது, மன ரீதியிலான ஒரு பாதிப்பை ஏற்படுத்தி, அக்கட்சியினருக்கு மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.கவில் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த பல தலைவர்களும் இணைவார்கள் என்று அமித்ஷா எச்சரித்திருப்பது, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் ஒரு திகிலை ஏற்படுத்தியுள்ளது.

இது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உள் குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. யாரெல்லாம் பாஜகவில் இணைய போகிறார்கள், யாரெல்லாம் இணையப் போவது இல்லை என்ற குழப்பமும் சந்தேகமும் நீடித்து வருகிறது. யார் மேலும் நம்பிக்கை இல்லாத ஒரு சூழலும், மம்தா பானர்ஜிக்கு யார் விசுவாசமாக இருக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அடுத்த வருடம் மேற்கு வங்கத்தில் மாநில ஆட்சி மாறுவதற்கு வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளதையே சனிக்கிழமை நடந்த வெற்றிகரமான பேரணி காட்டுகிறது. இதுவரை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வெளிப்படையாகவே நடந்து வந்த காவல்துறையினர் இனிமேல் அப்படி நடப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேற்கு வங்காள பா.ஜ.க மாநில தலைவர் திலீப் கோஷ் கூறுகையில், மேற்கு வங்காளத்தின் அரசியல் வரலாற்றில் திரிணாமுல் காங்கிரஸின் முடிவாக சனிக்கிழமை இருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார். அவர் கூறுவது உண்மையா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் இந்த தினம் மேற்கு வங்காளத்தின் தற்போதைய அரசியல் நீரோட்டத்தை மாற்றி அமைத்துள்ளது என்பது மிகையாகாது.

பா.ஜ.கவை குறித்த பொதுமக்களின் அபிப்பிராயத்தையும் இந்த சனிக்கிழமை நடந்த பேரணி மாற்றிவிட்டது. பா.ஜ.க சவாலாக இருந்தாலும், திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து அடுத்த வருடம் ஆட்சிக்கு வரும் என்ற பொதுவான நம்பிக்கையை இப்பேரணி தகர்த்துள்ளது.

பா.ஜ.க இந்த முறை ஒரு வலுவான எதிர்க்கட்சியாகவும் அடுத்த ஐந்து வருடங்களுக்குள் ஆட்சியை பிடிக்கும் என்பதே பலரின் கணிப்பாக இருந்தது.ஆனால் சனிக்கிழமை நடந்த நிகழ்வுகள், அதனுடைய ஆட்சிக்காலம் தற்பொழுது வந்து விட்டதா என்ற கேள்வியை மக்களின் மனதில் எழுப்பியுள்ளது. அடுத்த ஆட்சியை பிடிக்கும் என்ற பொதுவான பார்வையும் ஏற்பட்டுள்ளது. அரசியலில் இந்தப் பார்வை (perception) மிகவும் முக்கியமானது. அது தற்பொழுது பா.ஜ.கவிற்கு சாதகமாக உள்ளது.

Courtesy: Swarajya

Next Story
கதிர் தொகுப்பு
Trending News