திருமாவளவனின் இந்து விரோத போக்கிற்கு காரணம் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் மதமாற்றத்தை தடுப்பதாலா?
திருமாவளவனின் இந்து விரோத போக்கிற்கு காரணம் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் மதமாற்றத்தை தடுப்பதாலா?

"பாரதிய ஜனதா கட்சியும் RSSம் இந்துக்களை மதம் மாற விடாமல் தடுக்கிறார்கள்" என்றும் அதனால் தான் பாரதிய ஜனதா கட்சியை எதிர்ப்பதாகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளிப்படையாகவே தான் ஒரு மத மாற்ற ஏஜன்ட் என்பதை ஒப்புக் கொள்ளும் வகையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், "இந்தியாவில் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கோ அல்லது இஸ்லாமுக்கோ மாற்றுபவர்களின் எண்ணிக்கையில் எஸ்சி/எஸ்டி எனப்படும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் சதவீதம் தான் அதிகம். அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கும் இஸ்லாமிய மதத்திற்கும் பௌத்த மதத்திற்கும் அதிக அளவில் மாறிக் கொண்டிருக்கின்றனர்.
மதமாற்றம் என்பது மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இதுபோன்ற மத மாற்றங்களை தடுக்கும் சக்தியாக பாரதிய ஜனதா கட்சி, ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகள் இருந்து வருகின்றனர்" என்று பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற இந்து அமைப்புகள் பற்றிய தனது எண்ண ஓட்டத்தை வெளிப்படையாகக் கூறி இருக்கிறார்.
மேலும், பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை விட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் அவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பதினால் தான் அவர்கள் மதம் மாறி செல்கின்றார்கள் என்பதை பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ்சும் உணர்ந்து இருப்பதாகவும் அதனால் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது என்பதை அறிந்த அவர்கள் இத்தகையோர் மதம் மாறாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்றும் கூறி இருக்கிறார்.
பொதுவாக ஆர்.எஸ்.எஸ் மதவாத அமைப்பு, மதக் கலவரத்தை தூண்டுகிறது என்று மட்டுமே பா.ஜ.க மற்றும் இந்து எதிர்ப்பு சக்திகள் பேசி வருவது வழக்கமாக இருக்கும் நிலையில், மதம் மாறிச் செல்லும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இந்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக வீடு கட்டி தருவது, கழிப்பறை வசதிகளை செய்து தருவது, கட்சியின் உறுப்பினர்களாக சேர்த்து அவர்களை மதம் மாற விடாமல் தடுத்து அவர்களிடம் இந்து உணர்வை ஊட்ட வேண்டும் என்பது போன்றவையே பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் முக்கிய கொள்கைகளாக கடந்த 15 ஆண்டுகளாக இருந்து வருகிறது என்று திருமாவளவன் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
நல்லது தானே செய்கிறார்கள் இதில் என்ன தவறு இருக்கிறது என்றும், ஒடுக்கப்பட்ட மக்களை கண்டு கொள்ளாவிட்டால் "பாஜக ஆர்எஸ்எஸ் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரானது" என்று பிரச்சாரம் செய்வது, அவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தால் "பாஜக ஆர்எஸ்எஸ் மதவாத அமைப்புகள்" என்று பொய் பரப்புவது என்று தங்கள் கொள்கையை மறந்து பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகளை எதிர்ப்பதையே வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் வேலையாக செய்து வருகின்றன என்று இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் திருமாவளவனை விமர்சித்து வருகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தனது கட்சியின் கொள்கை மற்றும் நிலைப்பாட்டுக்காக பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்கவில்லை என்றும் இந்துக்களை மதம் மாற விடாமல் பாரதிய ஜனதா தடுத்து கொண்டிருப்பதால் தான் அவர் பாரதிய ஜனதா மீதும் இந்துக்கள் மீதும் பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் இந்த காணொளியின் மூலம் தெள்ளத் தெளிவாகிறது.