Kathir News
Begin typing your search above and press return to search.

"ஆக மீதி 1500 ரூபாய்" - ஸ்டாலினின் கணக்கிற்கு சற்று நேரத்தில் பதறிப்போன உடன்பிறப்புகள்

"ஆக மீதி 1500 ரூபாய்" - ஸ்டாலினின் கணக்கிற்கு சற்று நேரத்தில் பதறிப்போன உடன்பிறப்புகள்

ஆக மீதி 1500 ரூபாய் - ஸ்டாலினின் கணக்கிற்கு சற்று நேரத்தில் பதறிப்போன உடன்பிறப்புகள்
X

Mohan RajBy : Mohan Raj

  |  31 Dec 2020 7:46 AM GMT

ஒரு அரசியல் தலைவர் பேசுகிறார் என்றால் அவரின் பேச்சை வைத்து புரட்சி, போராட்டங்கள் நடைபெறும் அதிலும் எதிர்கட்சி தலைவர், சட்டமன்ற தேர்தலில் எதிர்கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளர், முன்னாள் முதல்வரின் மகன் என இத்தனை முக்கிய அம்சங்களும் உடைய ஒரு அரசியல் தலைவர் பேசுகிறார் என்றால் தொண்டர்களின் மத்தியில் எழும் எழுச்சியை கேட்கவா வேண்டும்? அனல் தெறிக்கும். ஆனால் அதற்கு மாறாக விமர்சகர்களும், சாமானியர்களும், ஏன் அவர் சார்ந்த கட்சிகாரர்களும் அவரின் பேச்சை ஒருமுறைக்கு மூன்று முறை கேட்டு பிறகு "அவர் சரியாகத்தான் சொல்லியிருக்காருப்பா" என கூறுவதும். அதிலும் குறிப்பாக அவரின் உடன்பிறப்பாக வாழும் தொண்டர்களே "அப்பாடா நம்ம தலைவர் இந்த முறை சரியாக பேசிவிட்டார் தப்பித்தோம்" என பெருமூச்சு விடுவது வரலாற்றில் ஒரே ஒரு அரசியல் தலைவருக்குதான் நடக்கும். அது தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்குதான்.

காரணம் வரலாறு அப்படி, தி.மு.க தலைவர் பேசுவதை அவர் கட்சி தொண்டர்கள் கவனிப்பதை விட "இவர் சரியா பேசிடனுமே" என்ற கவலைதான் ஒவ்வொரு உடன்பிறப்புகளுக்கும் இருக்கும். அப்படி தனிச்சிறப்பு வாய்ந்தது தி.மு.க தலைவர் ஸ்டாலினின் பேச்சு.

இந்த சிறப்புகளுக்கிடையில் ஒரு சம்பவமும் நடந்தேறியுள்ளது. நேற்று ராணிப்பேட்டை, அனந்தலையில் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் தி.மு.க கூட்டத்தை ஸ்டாலின் நடத்தினார். அப்பொழுது தமிழக அரசின் பொங்கல் பணமான 2500 ரூபாய் குறித்து பேசுகையில், "தமிழக அரசு 2500 ரூபாய் குடுப்பதை நாங்கள் வரவேற்கிறோம், ஏனென்றால் நாங்கள் 5000 ரூபாய் வழங்க கூறினோம் அவர்கள் 2500 ரூபாய் வழங்கியிருக்கிறார்கள்" என பேசினார்.

இதனை தொடர்ந்து பேசிய கணக்குதான் சிறப்பு, "நாங்கள் கூறியது போல் 5000 ரூபாய் வழங்க வேண்டும். ஏற்கனவே கொரோனோ ஊரடங்கு காலகட்டத்தில் 1000 ரூபாய் வழங்கிவிட்டார்கள், தற்பொழுது 2500 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆக 3500 ரூபாய் வழங்கியதாக கணக்கு, இன்னும் 1500 ரூபாய் வழங்கி விட்டால் தி.மு.க கூறிய 5000 ரூபாய் வழங்கியதாக கணக்காகிவிடும்" என்றார்.

வழக்கம்போல் ஸ்டாலின் கணக்கு விஷயத்தில் 5000 ரூபாய் பணத்தில் 2500 ரூபாய் போக 1500 ரூபாய் தவறாக கூறிவிட்டார் என சில நேரம் சமூக வலைதளங்களில் ஒருபுறம் வீடியோ பரவியது. மறுபுறம் உடன்பிறப்புகளோ "போச்சுடா இது வேறயா?" என தி.மு.க தலைவர் ஸ்டாலினின் வீடியோ'வை திரும்ப, திரும்ப பார்த்து இறுதியில் "அப்பாடா சரியாத்தான் பேசியிருக்கார் என நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இதில் குறிப்பிடதக்க விஷயமே "என் தலைவர் தவறாக பேசியிருக்க மாட்டார்" என உடன்பிறப்புகள் நம்பாமல் மீண்டும் ஒருமுறை ஆய்வுக்கு பிறகே நம்பி பின் நிம்மதியானதுதான்.

அந்தளவிற்கு உள்ளது உடன்பிறப்புகளின் நம்பிக்கை தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News