ஆர்.எஸ்.எஸ்., போன்று பா.ம.க.வினர் இருக்க வேண்டும்.. பொதுக்குழுவில் பேசிய ராமதாஸ்.!
ஆர்.எஸ்.எஸ்., போன்று பா.ம.க.வினர் இருக்க வேண்டும்.. பொதுக்குழுவில் பேசிய ராமதாஸ்.!
By : Kathir Webdesk
ஆர்எஸ்எஸ் அமைப்பை போன்று பாமகவினர் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று சிறப்பு பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கண்ணுக்குத் தெரியாமல் தேர்தல் வேலைகளைச் செய்வார்கள் என்றும், அந்த அமைப்பை போன்று பாமகவினர் திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கடந்த தேர்தல்களில் பாமக தோல்வி அடைந்தற்கான காரணம், பாமக நிர்வாகிகள் சரிவர தேர்தல் பணியாற்றவில்லை என்பதுதான் என்று குறிப்பிட்ட ராமதாஸ், பாமக கோட்டையான தர்மபுரியில் அன்புமணி தோல்வியடைந்தற்கு காரணமும் பாமகவினர் சரியாக தேர்தல் வேலை செய்யாததே என்று குற்றம்சாட்டினார்.
தனியாக தேர்தலில் நின்று 25 தொகுதிகளில் வெற்றி பெறாவிட்டால் எதற்காக கட்சி நடத்த வேண்டும் என்று பொதுக்குழுவில் கலந்து கொண்டவரிகளிடம் ராமதாஸ் காட்டமாக கேள்வி கேட்டுள்ளார்.