Kathir News
Begin typing your search above and press return to search.

'இந்து ஆலயங்கள் எப்போதும் மீது தி.மு.க'விற்கு வெறுப்புணர்வுதான்' - தி.மு.க'வின் இந்து மத வெறுப்பை பட்டியலிடும் வானதி சீனிவாசன்

'மதச்சார்பின்மை, நாத்திக வாதம் பேசும் தி.மு.க'விற்கு இந்து ஆலயங்கள் மீது எப்போதும் வெறுப்புணர்வு உண்டு' என வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்து ஆலயங்கள் எப்போதும் மீது தி.மு.கவிற்கு வெறுப்புணர்வுதான் - தி.மு.கவின் இந்து மத வெறுப்பை பட்டியலிடும் வானதி சீனிவாசன்

Mohan RajBy : Mohan Raj

  |  10 Jun 2022 1:16 PM GMT

'மதச்சார்பின்மை, நாத்திக வாதம் பேசும் தி.மு.க'விற்கு இந்து ஆலயங்கள் மீது எப்போதும் வெறுப்புணர்வு உண்டு' என வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, 'மதச்சார்பின்மை, நாத்திக வாதம் பேசும் தி.மு.க'விற்கு இந்து ஆலயங்கள் மீது எப்போதும் வெறுப்புணர்வு கொண்டு தி.மு.க ஆட்சிக்கு வரும் போதெல்லாம் இந்து ஆலயங்களில் பிரச்சனைகளை உருவாக்குவது வாடிக்கையாகி வருகிறது. நாயன்மார்களும், ஆழ்வார்களும் வாழ்ந்த தமிழகம் ஒரு ஆன்மீக மண் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக கோவில்கள் உள்ளன.

என்னதான் இந்து வெறுப்பைக் காட்டினாலும் தமிழகத்தின் அடையாளமாக இன்றளவும் இருப்பது சேர, சோழ, பாண்டிய பல்லவ மன்னர்கள் கட்டிய பிரம்மாண்ட கோவில்கள் தான். கோவில்கள் இல்லாமல் தமிழகம் இல்லை, தமிழகத்தின் கலாச்சாரம் பண்பாடு இல்லை எனவே தமிழகத்தை தொடர்ந்து தங்கள் பிடியில் வைத்திருக்க கோவில்களின் பாரம்பரியத்தை சிதைக்கும் வேலையில் இறைநம்பிக்கை அற்ற தி.மு.க அரசு ஈடுபட்டு வருகிறது.

சிதம்பரம் நடராஜர் ஆலயம் எப்பொழுதும் மதச்சார்பற்ற தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையிடம் இல்லை, தங்கள் நிர்வாகத்தில் இல்லாத கோவிலில் ஆய்வு நடத்த குழுவை அனுப்புவது எந்த விதத்தில் நியாயம்? ஸ்ரீ நடராஜர் கோவில் நிர்வாகத்தில் தவறுகள் இருந்தால் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறில்லை ஆனால் தங்கள் தன் கட்டுப்பாட்டில் இல்லாத கோவில் நேரடி நடவடிக்கைகளில் இறங்குவது சிவ பக்தர்களின் மனதை இந்துக்களின் மனதை புண்படுத்தும் செயல்.

தி.மு.க'வின் இந்து வெறுப்பு கொள்கையை பரப்ப கூடிய யூடியூப் சேனலில் ஸ்ரீநடராஜர் இழிவுபடுத்திப் பேசிய நபர் மீது நடவடிக்கை கோரி ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் சிதம்பரத்தில் போராட்டம் நடத்தினார்கள். ஆனாலும் அந்த யூடியூப் சேனல் மீதும் நடராஜரை இழிவுபடுத்தி அவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மாறாக ஸ்ரீ நடராஜர் கோவில் பாரம்பரியத்தை சிதைக்கும் வகையில் ஆதிகுடி தில்லை தீட்சிதர்கள் மீது தி.மு.க அரசு வன்மத்தை காட்டி வருவது கண்டனத்துக்குரியது.

மதச்சார்பற்ற அரசு மத விவகாரங்களில் கோவில் வழிபாட்டு உரிமைகளை தலையிடாமல் இருக்க வேண்டும், ஸ்ரீ நடராஜர் கோவில் வரவு செலவுகளை ஆய்வு செய்வதில் ஆர்வம் காட்டுவது போல் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் வரவு செலவு கணக்குகளை மத்திய தணிக்கை துறை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.


Source - Vanathi Srinivasan Tweet

Next Story
கதிர் தொகுப்பு
Trending News