"ஒத்துமையா இருங்கப்பா" - துரைமுருகனையே புலம்ப வைத்த உடன்பிறப்புகள்.!
"ஒத்துமையா இருங்கப்பா" - துரைமுருகனையே புலம்ப வைத்த உடன்பிறப்புகள்.!
By : Mohan Raj
தி.மு.க'வின் உட்கட்சி மோதல் எந்தளவிற்கு இருக்கிறது எனறால் கட்சியில் பொதுச்சயலாளர் துரைமுருகன் தி.மு.க'வின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் "பகைமையை மறந்துவிடுங்கள்" என அனைவரின் முன்பு புலம்பி கூறியதில் இருந்தே தெரிகிறது தி.மு.க'வினரின் மேலிட அதிருப்தி மற்றும் கட்சி மேல் சுத்தமாக அற்று போய்விட்ட நம்பிக்கை.
கருணாநிதி இறந்த பிறகு அவரின் வாரிசு என்ற ஒற்றை காரணத்தை மட்டும் வைத்துக்கொண்டு தலைவராக வந்த ஸ்டாலின் மீது உடன்பிறப்புகளுக்கு நம்பிக்கை சுத்தமாக இல்லை என்பதையே கட்சியின் மூத்த தலைவர் துரைமுருகன் பேச்சில் இருந்தே தெரிகிறது.
இது தொடர்பாக நேற்றைய கூட்டத்தில் அவர் புலம்பி தீர்த்துவிட்டார். அவர் பேசியது, "தேர்தல் முடிகிற வரைக்கும் நான் யாரிடமும் பகைமை காட்டமாட்டேன், யாரிடத்திலும் போட்டு கொடுக்க மாட்டேன் என்று அனைவரும் சபதம் எடுத்துக்கொள்ளுங்கள். இன்னும் கொஞ்சம் முன்னால் போய் சொல்கிறேன்.
வன்நெஞ்சம் நாம் படைத்தவர்கள் சிலர் வருமான வரித்துறைக்கே நம்மை பற்றி வாம் செய்தி சொல்லும் அளவுக்கு சில போரின் உள்ளம் மங்கி, நன்றி நிலை கெட்டு மறந்து போய் இருக்கிறது. அதை எல்லாம் பார்க்கும் போது 60, 70 ஆண்டு காலம் இந்த கட்சியில் வாழ்ந்து விட்ட எனக்கு வருத்தமாக இருக்கிறது. எனவே ஒன்றே லட்சியம் எனது தலைவர் கோட்டையில் அமரவேண்டும் என்பதை மட் டுமே நோக்கமாக கொண்டிருக்க வேண்டும். இந்த இயக்கத்தின் மீது பற்று இருந்தால்,
தலைவர் மீது பற்று இருந்தால் பகைமையை மறங்கள். ஒற்றுமையே வெற்றி என்று நில்லுங்கள். கருணாநிதியின் மகன் கட்சியை காப்பாற்றினான் என்று பெயரும், புகழையும் இந்த இயக்கத்துக்கு வாங்கி தாருங்கள்" இவ்வாறு அவர் பேசினார்.
தி.மு.க'வில் எந்தளவிற்கு பகைமையும், உட்கட்சி மோதல்களும் உலாவருகின்றன என்பதற்கு துரைமுருகனின் இந்த பேச்சே சான்றாக விளங்குகிறது.