Kathir News
Begin typing your search above and press return to search.

மு.க.ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை.. அமைச்சர் கணிப்பு.!

மு.க.ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை.. அமைச்சர் கணிப்பு.!

மு.க.ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை.. அமைச்சர் கணிப்பு.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Jan 2021 1:21 PM GMT

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஜாதகம் கட்டம் சரியில்லை என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். சட்டப்பேரவை தேர்தல் தமிழகத்தில் நெருங்கி வரும் நேரத்தில் அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் பரப்புரையை தொடங்கியுள்ளது. அதிமுக சார்பில் பரப்புரையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் நேரத்தில் திமுக சார்பில் ஸ்டாலின் நடத்தி வரும் கிராம சபைக்கூட்டம் ஏதாவது பிரச்சனையில் முடிந்து விடுகிறது.

அப்படி இதுவொரு புறமிருக்க ஸ்டாலின் பங்கேற்ற கிராம சபை கூட்டத்தில் பெண் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் அப்பெண்ணை திமுக குண்டர்களை வைத்து ஸ்டாலின் அப்புறப்படுத்த சொன்னார். இது அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியது. இந்த சம்பவத்துக்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனங்கள் தெரிவித்தது. அதற்கு போட்டியாகவே நேற்று கோவை, தொண்டாமுத்தூரில் கண்டன பொதுக்கூட்டமும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பரபரப்பான சூழலில் மு.க.அழகிரி நேற்று தனது ஆதரவாளர்களுடன் புதிய கட்சி தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அதில் ஸ்டாலினால் முதலமைச்சராக வரவே முடியாது. உடல்நல குன்றிய தந்தையை கட்டாயப்படுத்தி போட்டியிட வைத்தார்கள். நான் எந்த முடிவை எடுத்தாலும் அதற்கு அனைவரும் சம்மதம் சொல்ல வேண்டும் என்று கூறினார். அழகிரியின் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அழகிரி கட்சி தொடங்கினால் திமுக உடையும் என்றார்.

இந்நிலையில், மதுரை உசிலம்பட்டியில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசுகையில், மு.க.ஸ்டாலினுக்கு ஜாதகம் சரியில்லை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தான் ஜாதகம் நல்லதாக உள்ளது. ஏற்கனவே வந்தவர் வந்த வழியே போய் விட்டார் என்றார். நேற்றைய கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை என்ற கருத்தை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News