'அறிவாலயமே ஆக்கிரமிப்பில் கட்டிய கட்டிடம்தான்' - போட்டு உடைத்த சீமான்
அறிவாலயமே ஆக்கிரமிப்பில் கட்டியதுதான் என சீமான் கூறியது அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By : Mohan Raj
அறிவாலயமே ஆக்கிரமிப்பில் கட்டியதுதான் என சீமான் கூறியது அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சின்ன போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆயருக்குல தலைவர் மாயோன் திருநாள் கொண்டாடப்பட்டது. அதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
அங்கு அவர் பேசியதாவது, 'முல்லை நிலத்தின் இறைவன் மாயோன். அதுதான் கிருஷ்ண ஜெயந்தியாக மாறி கொண்டாடப்பட்டு வருகிறது அதன் நாளை மாயவன் நாளாக கொண்டாட போராடி வருகிறோம் இது பண்பாட்டு மீட்சி' என குறிப்பிட்டார்.
பரந்தூர் இரண்டாவது விமான நிலையம் அமைவுள்ள இடத்தில் பத்திரப்பதிவில் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'பல நீதிமன்றங்கள், வள்ளுவர் கோட்டம் போன்ற பல இடங்கள் ஆக்கிரமிப்பில் தான் கட்டப்பட்டுள்ளது. ஏன் அறிவாலயமே ஆக்கிரமிப்பில் தான் கட்டப்பட்டுள்ளது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?' என அவர் கேள்வி எழுப்பினர்.
