தேனி அ.தி.மு.க. எம்.பி.ரவிந்திரநாத்குமார் கார் மீது தி.மு.க.வினர் கல் வீசி தாக்குதல்.!
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிமுக, பாஜக, பாமக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகள் அதிகளவு செலுத்தும் நிலை உருவாகியுள்ளது.

தேனி அதிமுக எம்.பி. ஓ.பி.ரவிந்திரநாத்குமார் கார் மீது திமுகவினர் கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிமுக, பாஜக, பாமக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகள் அதிகளவு செலுத்தும் நிலை உருவாகியுள்ளது.
இதனை பொறுத்துக்கொள்ள முடியாத திமுக, குண்டர்களை வைத்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகளை தாக்கி வருகிறது. அந்த வகையில் தேனி அதிமுக எம்.பி.ரவிந்திரநாத்குமார் போடி அருகே சென்று கொண்டிருந்தபோது, கார் மீது திமுகவினர் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் அவரது கார் சேதமடைந்தது. அவர் காயமின்றி தப்பினார். கல் எறிந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக எம்.பி. மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தேனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.