Kathir News
Begin typing your search above and press return to search.

31 நாட்களில் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது இது வெறும் ட்ரெய்லர்தான் இன்னும் 120 நாட்கள் உள்ளன - அண்ணாமலை சவால்.!

31 நாட்களில் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது இது வெறும் ட்ரெய்லர்தான் இன்னும் 120 நாட்கள் உள்ளன - அண்ணாமலை சவால்.!

31 நாட்களில் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது இது வெறும் ட்ரெய்லர்தான் இன்னும் 120 நாட்கள் உள்ளன - அண்ணாமலை சவால்.!
X

Mohan RajBy : Mohan Raj

  |  8 Dec 2020 7:30 AM GMT

"31 நாட்களில் தமிழகத்தில் அரசியல் மாற்றம் நடைபெற்றது, இது சும்மா ட்ரெய்லர்'தான் இன்னும் 120 நாட்கள் உள்ளன தமிழகத்தில் பா.ஜ.க பெரும் மாற்றத்தை ஏற்படுத்த" என தமிழக
பா.ஜ.க துணைத்தலைவர் அண்ணாமலை அவர்கள் பேசியுள்ளார்.

தமிழக பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட வேல் யாத்திரை நிறைவு விழா இன்று திருச்செந்தூரில் நடைபெற்றது. அதில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்றார்.
ஏராளமான தொண்டர்கள் வேலுடன் பங்கேற்றனர்.

அந்த கூட்டத்தில் பேசிய தமிழக பா.ஜ.க துணைத்தலைவர் அண்ணாமலை, "தமிழக பா.ஜ.க ஒரு புதிய அத்தியாயத்தை படைத்துள்ளது. நிறைய பேர் இந்த வேல் யாத்திரையின் மூலம் விழிப்புணர்வு அடைந்துள்ளனர். மேலும் எத்தனையோ இடையூறுகளை தமிழக காவல்துறை சார்பில் குடுத்தனர் ஆனால் ஒரு பா.ஜ.க தொண்டர் கூட காவல்துறையை எதிர்க்கவில்லை மாறாக பணிவுடன் காவல்துறை கட்டளையை ஏற்றுகொண்டனர். இரவில் கூட கைது செய்யும் நடவடிக்கை நடந்ந பொழுதும் கூட, ஆனால் திராவிட முன்னேற கழக உறுப்பினர்கள் ஒரு சிறிய போராட்டத்தில் கூட காவல்துறையை மதிக்காமல் தடுப்புகளை பிடிங்கி எறிந்து சென்றதை தமிழக எட்டு கோடி மக்களும் பார்த்தனர்" என்றார்.

மேலும் பேசிய அவர், "தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் அவர்கள் 'வேல் யாத்திரை துவங்கிய அன்று காலில் இருந்த செறுப்பை கழட்டி யாத்திரையை துவக்கினார் இன்று வரை விரதமிருந்து வேல் யாத்திரையை நடத்தி வருகிறார் இதுதான் அர்ப்பணிப்பு" என புகழ்ந்தார்.

இதே தி.மு.க'வினர் 'விடியலை நோக்கி' பேரணி வரும்போது ஹம்மர் காரில் வந்து இறங்கி, பேருக்காக போராட்டம் செய்து பின் போகும் போது காவல்துறை தடுப்புகளை தூக்கி வீசிவிட்டு சென்றனர்" என்றார்.

இறுதியாக பேசிய அவர், "31 நாட்களில் தமிழகத்தில் அரசியல் மாற்றம் நடைபெற்றது, இது சும்மா ட்ரெய்லர்'தான் இன்னும் 120 நாட்கள் உள்ளன தமிழகத்தில் பா.ஜ.க பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்" என முழங்கினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News