உதயநிதியை அமைச்சருக்கும் நேரத்தில் கட்சிக்குள் அடிதடி இருக்க கூடாது - தீவிர வேலைப்பாடுகளில் தி.மு.க தலைமை
உதயநிதி ஸ்டாலினுக்கு ஏன் இன்னும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.

உதயநிதி ஸ்டாலினுக்கு ஏன் இன்னும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் தீவிர கவனம் செலுத்திய போது அவர் அரசியலுக்கும் நுழைந்தார் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ'வாகவும் வெற்றி பெற்றார்.
பின்னர் அவர் அமைச்சராக வேண்டும் என்பதில் சில தி.மு.க அமைச்சர்கள் மத்தியில் ஆங்காங்கே கோரிக்கை எழுந்தது, சில அமைச்சர்கள் தங்கள் ஆதரவாளர்களை கூட்டி தீர்மானமும் போட்டனர் இந்த நிலையில் அவர் அமைச்சர் ஆக அறிவிக்கப்படாமல் இருப்பது உதயநிதி ஆதரவாளர்களிடம் வியப்பை ஆழ்த்தியுள்ளது.
ஆனால் உதயநிதிக்கு ஏன் இன்னும் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது, அமைச்சர் பதவி கொடுப்பதற்கு முன்பு உதயநிதியை தயார் செய்யவும் மேலும் அவருக்கு அமைச்சர பதவி கொடுத்தால் கட்சியில் அதிருப்தி ஏற்படாமல் இருக்கும் வகையில் அனைவரையும் சரி கட்டும் வேலைகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அமைச்சர் பதவியை உதயநிதி ஏற்கும் முன் கட்சிக்குள் எதிர்ப்பு இருக்காது வண்ணம் பார்த்துக் கொள்ளுமாறும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது திமுக தரப்பில் என்ற தகவல் கிடைத்துள்ளது.