Kathir News
Begin typing your search above and press return to search.

இவர்கள்தான் செய்திகளில் டாப்.. 1வது இடத்தில் முதல்வர் எடப்பாடி.. 2ம் இடத்தில் ரஜினி.. கடைசி இடத்தில் ஸ்டாலின்.!

இவர்கள்தான் செய்திகளில் டாப்.. 1வது இடத்தில் முதல்வர் எடப்பாடி.. 2ம் இடத்தில் ரஜினி.. கடைசி இடத்தில் ஸ்டாலின்.!

இவர்கள்தான் செய்திகளில் டாப்.. 1வது இடத்தில் முதல்வர் எடப்பாடி.. 2ம் இடத்தில் ரஜினி.. கடைசி இடத்தில் ஸ்டாலின்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Dec 2020 5:02 PM GMT

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற நாளில் இருந்து தற்போது வரை நாளிதழில் தலைப்புச் செய்தி மற்றும் பேசும் பொருளாகவே வளர்ந்து வருகின்றார் என்றால் அது மிகையாகாது. தினமும் ஏதாவது திட்டங்களை மக்களுக்காக தொடங்கி வைப்பது. அல்லது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது என்ற கொள்கையை கடைபிடித்து வருகிறார். இதன் காரணமாகவே அனைத்து நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் இவரை செய்தியாக்கி வருகிறது.

இந்நிலையில், செய்திகளில் அதிக இடங்களை பிடித்த தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்று, ஆன்லைன் மூலமும், குறுஞ்செய்தி மூலமாகவும் கருத்து கணிப்பு நடத்தியது. இதில், முதல் இடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அரசியல் கட்சி துவங்க உள்ள நடிகர் ரஜினியும் 2வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 1,228 பேர் கலந்து கொண்டனர். அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 835 ஓட்டுகளும் (68 சதவீதம்) ரஜினிக்கு ஆதரவாக 132 ஓட்டுகளும் (10.7 சதவீதம்) மற்றவர்களுக்கு ஆதரவாக 108 ஓட்டுகளும் (8.8 சதவீதம்) கொரோனா வைரஸ்க்கு ஆதரவாக 65 ஓட்டுகளும் (5.3 சதவீதம்), திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆதரவாக 45 ஓட்டுகளும் (3.7 சதவீதம் ) கமலுக்கு ஆதரவாக 28 ஓட்டுகளும் (2.3 சதவீதம்) கிடைத்துள்ளது.

குறுஞ்செய்தி மூலம் நடந்த கருத்துக்கணிப்பில் 621 பேர் பங்கெடுத்துள்ளனர். அவர்களில், ரஜினிக்கு ஆதரவாக 210 ஓட்டுகளும் (33.8 சதவீதம்), முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 85 ஓட்டுகளும் (13.7 சதவீதம்), ஸ்டாலினுக்கு ஆதரவாக 56 ஓட்டுகளும் (9 சதவீதம்) கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.

குறைந்த ஓட்டை பெற்ற ஸ்டாலின் இன்னும் வளர வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருவதையும் பார்க்க முடிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News