பிரதமர் மோடிக்கு அண்ணாமலை தமிழக பெருமையை கூற பரிசளித்த புத்தகங்கள் என்னென்ன?
By : Thangavelu
குஜராத் மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட திருக்குறள் புத்தகம் மற்றும் பொன்னியின் செல்வன் ஆங்கில மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட புத்தகம் ஆகியவற்றை பிரதமர் மோடிக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வழங்கினார்.
On behalf of @BJP4TamilNadu, presented to our Hon PM Thiru @narendramodi avl
— K.Annamalai (@annamalai_k) May 27, 2022
1. உலக பொதுமறை திருக்குறள் (குஜராத்தி மொழிபெயர்ப்பு)
Thirukural book translated in Gujarati
2. கல்கியின் பொன்னியின் செல்வன் (ஆங்கில மொழிபெயர்ப்பு)
Historical novel Ponniyan Selvan in English
1/2 pic.twitter.com/pvqlElRCtM
தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில் நிலையம், கேஸ் எரிவாயு உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், சில திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பதற்காக நேற்று (மே 26) பிரதமர் மோடி வருகை தமிழகத்திற்கு வருகை புரிந்தார். அதன்படி ஐதராபாத்தில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு தனி விமானம் மூலமாக பிரதமர் மோடி சென்னைக்கு வந்தார். அவரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர். இதனை தொடர்ந்து நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதனை முடித்துக்கொண்ட பிரதமர், பா.ஜ.க. நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடிக்கு இரண்டு புத்தகங்களை பரிசளித்தார். அதில் திருக்குறள் குஜராத்தி மொழியிலும், பொன்னியின் செல்வன் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்ட புத்தகத்தை வழங்கினார். இது குறித்து அவரது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Twitter